நடு இரவில் மகனை கட்டிப்பிடித்து கதறி அழுத சர்வைவர் விஜயலக்ஷ்மி – வைரலாகும் வீடியோ.

0
682
viji
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் விஜயலட்சுமி. இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். பின் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் விஜயலட்சுமி பங்கேற்றிருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி முதல் முதலாக ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி.

-விளம்பரம்-

ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பல சவால்கள் கொடுக்கப்பட்டது. கடுமையான பல போட்டிகள், சவால்கள் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் இந்த கேம்மை டெலிகாஸ்ட் செய்து இருந்தார்கள். பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய வியப்பாக இருந்தது.

- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சி:

இதில் ஆண்களுக்கு நிகராக போட்டியிட்டு ஒரு கோடியை விஜி தட்டிச் சென்றார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான வீடியோவும், புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் விஜயலட்சுமிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருந்தார்கள். அதே நேரம் இந்த நிகழ்ச்சி குறித்தும், விஜயலட்சுமி வெற்றி பெற்றது குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. கிட்டத்தட்ட 90 நாட்கள் இந்த போட்டிக்காக விஜயலட்சுமி தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனி தீவில் இருந்தார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்:

இந்நிலையில் விஜயலட்சுமி தீவில் இருந்து வந்து முதன் முதலாக தன் மகனை சந்தித்த போது எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை விஜயலட்சுமி அவர்கள் அகத்தியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நிலன் ஒரு மகன் இருக்கிறார். தற்போது இவருக்கு 3 வயது ஆகிறது. விஜி மூன்று வயது மகன் மற்றும் கணவரை பிரிந்து தீவிரமாக சர்வைவர் நிகழ்ச்சியில் விளையாடி இருந்தார். வெயில், மழை என அனைத்திலும் விஜயலட்சுமி கஷ்டப்பட்டு விளையாடியதால் அவருடைய நிறமே மாறி இருந்தது. ஆனால், அனைத்து கஷ்டங்களையும் தாண்டி டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தது அனைத்துமே மறக்கடித்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு பிறகு விஜி தன் மகனை சந்தித்த வீடியோ:

மேலும், மீண்டும் சென்னைக்கு திரும்பிய விஜி பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். தன்னுடைய அப்பா, அக்கா, தங்கைகளை சந்தித்த போதும், அவர்களுடன் இருந்த அனைத்து வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார். தன்னுடைய நிறம் மாற பார்லர் சென்று இருந்த வீடியோக்களையும் விஜி வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய மகனை முதன் முதலாக சந்தித்திருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜி 90 நாட்களுக்கு பிறகு தன்னுடைய மகனை முதன் முதலாக பார்க்க நிலன் ரூமுக்கு செல்கிறார். அங்கு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான். விஜி அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

விஜியின் எமோஷனல் வீடியோ:

நிலன் பாதித் தூக்கத்திலேயே கண்விழித்து யார் என்று பார்க்கிறான். உடனே விஜி அம்மா வந்துட்டேன்னு சொல்லி அந்த குழந்தையை கட்டி அணைத்து அழுகிறார். அழுகை தாங்க முடியாமல் விஜி ரொம்ப எமோஷனலா கதறி அழுது முத்தம் கொடுக்கிறார். இந்தத் எமோஷனல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்க்குகளை குவித்து எத்தனை கோடி கொடுத்தாலும் சரி, ஜெயித்தாலும்சரி தாய் பாசத்துக்கு இணையாகாது என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement