தன்னை சொன்னால் ஜனனிக்கு 18 வயசு ஆகுது, அசீமை சொன்னால் ஜனனி சின்ன பொண்ணா ? – விக்ரமனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
244
vikraman
- Advertisement -

பிக் பாஸ் விக்ரமனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
vikraman

மேலும், 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன்:

இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விக்ரமன் குறித்த விமர்சனம்:

நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வந்தார்கள். ஆனால், சில வாரங்களாக விக்ரமன் செய்யும் செயல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றிருக்கிறது. அதற்கு காரணம், அவருடைய பேச்சில் நிலைப்பாடு இல்லை என்று தான். முன்பு ஒரு பேச்சும், அதற்குப்பின் ஒரு பேச்சும் என்று மாத்தி மாத்தி பேசுகிறார் என்று பலரும் கூறினார்கள். இந்த நிலையில் விக்ரமன் குறித்த ஒரு சர்ச்சை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

விக்ரமன் செய்த செயல்:

அதாவது, ராஜா ராணி டாஸ்க்கில் ஜனனி பேசியதற்கு பலரும் அவள் ஒரு சின்ன பிள்ளை எதற்கு என்று கூறி இருந்தார்கள். உடனே விக்ரமன், கோபப்பட்டு ஜனனி 18 வயது நிரம்பிய பெண். அவர் ஒன்னும் சிறுபிள்ளை கிடையாது. அவர்களுக்கும் எல்லாமே தெரியும் என்று கூறியிருந்தார். இந்த வாரம் கொடுத்த பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்கின் போது அசீமிற்கும், ஜன்னனிக்கும் பயங்கரமாக வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

விக்ரமனை கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இது குறித்து வீட்டில் உள்ள பிற போட்டியாளர்கள் பேசி இருந்தார்கள். அப்போது விக்ரமன், ஜனனி சின்ன பிள்ளை. எதற்காக அவரிடம் தேவையில்லாமல் அசீம் சண்டை போடணும் என்று பேசினார். இந்த இரண்டு நிகழ்வை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு பூமர் விக்ரமன் என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். அதோடு இவர் எப்போதும் ஒரு நிலையாகவே இருக்க மாட்டுகிறார். தேவைக்கேற்றவாறு பேசிக் கொள்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement