தாலி கட்டி, மோதிரம் மாத்திக்கிட்டோம்- எளிமையாக நடந்த பிக் பாஸ் விக்ரமன் திருமணம், பொண்ணு யார் தெரியுமா?

0
243
- Advertisement -

பிக் பாஸ் விக்ரமனுக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். இவர் முதலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இருந்தாலும், இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அதன் மூலம் தான் இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் விக்ரமன்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது புகார் அளித்து இருந்தார். அதில் அவர், விக்ரமன் தன்னை காதலிப்பதாக சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கி என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறி இருந்தார். இது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதை அடுத்து தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் பேட்டியில் விளக்கம் கொடுத்து இருந்தார்.

விக்ரமன் திருமணம்:

மேலும், விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை உட்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்குப் பின் அந்த பிரச்சனையும் முடிந்துவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது விக்ரமனுக்கு திருமணமாகியிருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்று இருந்தது.

-விளம்பரம்-

விக்ரமன் பேட்டி:

இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்து இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் விக்ரமன், ப்ரீத்தி அவர்கள் பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களில் எல்லாம் பணியாற்றி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னாடியே எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகமானதிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு புரிதல் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. நண்பர்களாக சில காலம் நாங்கள் பழகினோம். அதுவே காதலாக மாறியது. இப்போது கல்யாணத்தில் முடிந்து இருக்கிறது.

திருமணம் குறித்து சொன்னது:

நாங்கள் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்த போது வீட்டில் சம்மதம் முக்கியம் என்பதில் தெளிவாக இருந்தோம். அதனால் ரெண்டு பேருமே வீட்டில் பேசினோம். ப்ரீத்தி முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி. பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுடைய திருமணம் நடந்தது. தாலி கட்டிக்கனும்னு என்று பீரித்தி ஆசைப்பட்டதால் பெரியவர்கள் சுயமரியாதை முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க அதை நான் அவர்கள் கழுத்தில் கட்டினேன். கிறிஸ்துவ முறைப்படியும் நாங்கள் மோதிரம் மாத்திக்கொண்டோம். எல்லோருக்காகவும் வரவேற்பு நடத்துற ஐடியாவும் இருக்கு. சீக்கிரம் சொல்கிறேன் என்று சந்தோஷத்தில் விக்ரமன் கூறியிருக்கிறார்.

Advertisement