விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

Advertisement

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன்.

Advertisement

தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார். ஆனால், நாட்கள் போக போக பல சமுதாய கருத்துக்களை சொல்லியதோடு, எந்த ஒரு இடத்திலும் சமநிலை தவறாமல் கண்ணியமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து இவர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த பிக் பாஸின் கடைசி வாரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘Bigboss-இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டு இருந்தார்.

திருமாவளவனின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அரசியல் கலக்க வேண்டாம் என்று பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விக்ரமன், அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அனுவித்து தனது மரியாதையை செலுத்தி இருக்கிறார்.

Advertisement