நிக்ஸன் விஷயத்தை கேட்காத கமல், மனவருத்தத்துடன் வினுஷா போட்ட பதிவு.

0
235
Vinusha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் போட்டியாளர்கள் சிலர் மற்ற போட்டியாளர்களை பற்றி பின்னால் பேசியது குறித்து அனைவர் முன்பும் விவாதிகப்பட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினுஷாவின் உடல் அமைப்பை பற்றி நிக்சன் பேசிய விஷயம் விவாதிகப்பட்டது. ஆனால். நான் தப்பான எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை. இதுகுறித்து வினுஷாவிடம் பேசி நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றும் நிக்சன் கூறி இருந்தார். இதனால் இந்த விஷயம் பெரிதாக விவாதிகப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து வினுஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘இப்போது நான் பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது குறித்து பேசி எனக்காக நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது அவரை நான் என்னுடைய தம்பியாக தான் நினைத்தேன். அவரை தம்பியாக நினைத்து தான் அவரிடம் பழகினேன். ஆரம்பத்தில் அவர் என்னை கேலி செய்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எல்லாம் ஜாலிகாக தான் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

- Advertisement -

ஆனால் போகப் போக அவர் என்னிடம் எல்லை மீறியதால் இனிமேல் அப்படி பேச வேண்டாம் உங்களுடைய நடவடிக்கை என்னை காயப்படுத்துகிறது என்று கூறிவிட்டதோடு அவரை இணைந்த செயலுக்காக நான் அவரை நாமினேட்டும் செய்தேன் ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் ஆனால் என்னை கேலி செய்ததற்காகத்தான் மன்னிப்பு கேட்டாரே தவிர இப்படி என்னை உறவுக்கு எலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

இந்த விஷயத்தில் நான் தெள்ளத் தெளிவாக சில விஷயத்தை கூற விரும்புகிறேன்

-விளம்பரம்-

1.பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நெக்சன் என்னை உருவ கேலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

.நிக்சன் என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் சொல்கிறார். “இல்லை, எனக்கு தெரியாது”.

3. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்த பின்னர் தான் அதைப் பற்றி அறிந்தேன்.

4. நிக்சன் இப்போது மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது.

5. Bully Gangகிற்கு என் பதில் என்னவெனில் ‘என்னைப் புறக்கணிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை’

6. போன வாரம் உரிமை குரல் தூக்கிய Feminist கும்பல் எங்கே?

எனக்காக குரல் கொடுத்த விச்சுமாவிற்கு நன்றி. நான் வீட்டில் இருக்கும் போது நிக்சனை மிகவும்மதித்தேன். அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோவை பார்த்த பிறகு, நான் அவர் மீது வைத்த மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இதை பற்றி பேசுவார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் கமல், நிக்சனிடம் இதுகுறித்து எந்த கேள்வியையும் கேட்கவில்லை. தற்போதும் நான் எனக்காக நிற்கிறேன். அனால், ஏமாற்றத்தில் தான் முடிந்தது. நிக்ஸன் விஷயத்தில் எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இன்று வெளியான ப்ரோமோக்களில் கூட வினுஷா விஷயத்தை பற்றி பேசியது போல தெரிவியவில்லை. ஒரு வேளை இன்றைய நிகழ்ச்சியில் கமல் வினுஷாவிற்காக கேள்வி எழுப்புவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement