பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ்.
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகினர். இந்த வாரம் ஓட்டிங் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பல்வேறு வளைதளத்தில் நடத்தி வந்த ஒட்டிங்கில் கவின் தான் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக லாஸ்லியா இருந்து வந்தார்.
இதையும் பாருங்க : என்னை தமிழ் மக்கள் மன்னியுங்கள்.! சர்ச்சை கருத்திற்கு ட்விட்டரில் கெஞ்சிய சாக்க்ஷி.!
ஆனால், தற்போது வந்த சமூக வலைதளத்தில் பிக்பாஸில் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பில் லாஸ்லியாவின் அதிகப்படியான வாக்குகள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக முகேன் , கவின், சேரன் என்று இருந்து வருகிறார்கள். பல்வேறு இணைய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கவின் முதலிடத்தை பிடித்து வந்த நிலையில் அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பில் லாஸ்லியா முதலிடத்தில் இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை இதற்கு முக்கிய காரணமே லாஸ்லியா விற்கு இலங்கையில் பெரும் ஆதரவு இருப்பதுதாக கூட இருக்கலாம். அதேபோல முகெனுக்கு மலேசியாவில் பெரும் ஆதரவு இருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அதிகப்படியான வாக்குகள் விழுந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.