இன்று கோல்டன் டிக்கெட் டாஸ்கின் இறுதி நாள்.! முன்னிலை வகிப்பது யார் ? வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா ?

0
15483
bigg boss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் போது லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால், சாண்டியிடம் கத்தினார் கவின். பின்னர் லாஸ்லியாவிற்காக போட்டியை கொஞ்சம் நேரம் நிறுத்தியதால் ஷெரின், கவினிடம் சண்டையிட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா பதிவிட்ட முதல் பதிவு.! ரசிகர்களின் அன்பான வேண்டுகோள்.!

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவினுக்காக சாண்டியை விட்டு கொடுக்க சொல்லி வக்காலத்து வாங்கினார் லாஸ்லியா. இப்படி இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கால் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது தான் போட்டி குணமே கொஞ்சம் எட்டி பார்த்து உள்ளது. இந்த நிலையில் இன்றுடன் இந்த டாஸ்க் நிறைவடைய இருகிறது.

-விளம்பரம்-

இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தற்போது வரை முகென் முதல் இடத்தில இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாக கவின் இருக்கிறார்கள். எனவே, கடைசி மூன்று இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த டாஸ்கில் வெற்றி பெற வாய்பே இல்லை. எனவே. முகென், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோருக்கு தான் போட்டி இருக்கும்.

அதே போல தங்க முட்டை டாஸ்க் இன்னும் நிறைவடைய இல்லை. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் கண்டிப்பாக 2 டாஸ்குகள் குடுக்கப்படும். என்வே, இன்று நடைபெறும் டாஸ்க் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன டாஸ்க் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement