வைல்டு கார்டு என்ட்ரியில் மற்றும் ஒரு வெளிநாட்டு போட்டியாளர்.! இவர் தான் அது.!

0
17397
Kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நபருடன் உரையாடி இருக்கும் கஸ்தூரி வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் நுழைய தயார் என்பது போல தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பதிவு போலியானது என்று தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : தண்ணீர் குட்டையில் ஈரமான புடவையில் மீரா மிதுன் பதிவிட்ட புகைப்படம்.! ரொம்ப ஓபன் டைப் போல.! 

- Advertisement -

மேலும், இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அதனை மறுத்து கஸ்தூரி ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் 17 வது போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த ஜான்சன் பிலிக்சன் என்பவர் கலந்து கொள்ளப்போவதாக தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

மலேசியாவை சேர்ந்த இவர் நடிகரும் பாடகருமாவார். இவருக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமமும் இருக்கிறதாம். மேலும், மலேசியா fm ஒன்றில் இவரது பிக் பாஸ் பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்டுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-


Advertisement