நான் பிக் பாஸ்-ல “wild card Entry” யா ..! கிண்டல் செய்து வீடியோ பதிவிட்ட கஸ்தூரி.!

0
623
Bigg-Boss
- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் செட்டிற்குள் பிரபல நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாகவும், இந்த வாரம் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியில் அவரை பிக் பாஸ் வீட்டினுள் எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.ஆனால், தற்போது அது பொய்யான தகவல் என்று நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பொன்னமலம் வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதே போல இந்த வாரம் ‘வைல்ட் கார்டு’ என்ட்ரியின் மூலம் நடிகை கஸ்தூரி சென்றுள்ளதாக பல்வேறு இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில்லை என்று பரவி வரும் செய்தி ஒரு வதந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, தற்போது தான் அமெரிக்காவில் இருக்கிறேன் என்றும் இது போன்ற வதந்திகளை எதற்காக பறப்புகின்றனர் என்றும் மிகவும் காட்டமாக அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

-விளம்பரம்-

kasthoori

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கபட்டதற்கு முன்பாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் பட்டியல் என்று பல்வேறு வலைத்தளத்தில் பல பெயர் பட்டியல் பரவி வந்தது.அதில் கஸ்தூரி பெயரும் அடிக்கடி அடிபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சி துவங்கபட்டதற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தனக்கு சின்ன பிக் பாஸ்தான் (கஸ்தூரியின் மகன்) முக்கியம், எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் எண்ணமில்லை’ என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Advertisement