அதிவேகமாக கார் ஓட்டியது யாஷிகா தான் – வெளியான CCTV ஆதாரம். சிக்கலில் யாஷிகா.

0
1128
Yashika
- Advertisement -

அதி வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கிய யாசிகா, விபத்திற்கு முன் கார் ஓட்டிய CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகை யாஷிகா தனது காரில் தனது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் சென்னை திரும்பியுள்ளார்.

- Advertisement -

மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.இதில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும் யாஷிகா அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. யாஷிகாவிற்கு தற்போது முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. போலீசார் விசாரணையில் யாஷிகா தான் கார் ஒட்டியதாக கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் யாஷிகா அதிவேகமாக கார் ஒட்டிய CCTV காட்சிகள் வெளியாகி உள்ளது. யாஷிகா தான் கார் ஓட்டியுள்ளார் என்று நிரூபணம் ஆனதால் ஏற்கனவே 3 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

-விளம்பரம்-
Advertisement