அவளுக்காக Pray பண்ணுங்க – யாஷிகாவின் தற்போதைய நிலை குறித்து கூறிய யாஷிகாவின் தங்கை.

0
1820
yashika
- Advertisement -

சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-
Bigg Boss Yashika Anand Sister Latest Photoshoots

இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகை யாஷிகா தனது காரில் தனது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் சென்னை திரும்பியுள்ளார்.மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.

இதையும் பாருங்க : சார்பட்டா படத்த எடுத்ததுக்கு உன்ன பாராட்ட மாட்டேன் – ரஞ்சித்துக்கு நாசர் கடிதம்.

- Advertisement -

இதில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மேலும் யாஷிகா அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் தனது அக்காவின் நிலை குறித்து யாஷிகாவின் தங்கை ஒஷீன் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‘உங்கள் அனைவரும் பிரார்த்தனைகும் நன்றி, யாஷிகா தற்போது சுய நினைவிற்கு வந்துவிட்டார். அவருக்கு செய்யப்படவிருந்த ஒரு அறுவை சிகிச்சை முடிந்தது. கடவுள் புண்ணியத்தில் அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுகளுக்கான சிகிச்சை விரைவில் நடைபெற இருக்கிறது. அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement