ஒரு திரைப்படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் மக்கள் சிரிப்பதற்கு மட்டுமே இருந்தது. காமெடி காட்சிகளை பார்த்து சிரிப்பதையும் தாண்டி அதில் சிந்திக்கவும் வைத்தவர் பிரபல காமெடி நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகளில் கண்டிப்பாக ஒரு மெசேஜும் இருக்கும். அது நம் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தாக நிச்சயம் இருக்கும். ஆகையால், ரசிகர்கள் இவரை பாசத்துடன் ‘ஜனங்களின் கலைஞன்’ என்று அழைத்து வருகின்றனர்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் விவேக் காமெடியனாக வலம் வந்திருக்கிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் விவேக். இவரது நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு ‘தல’ அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’ மற்றும் ‘வெள்ளைப் பூக்கள்’ என மூன்று படங்கள் வெளி வந்தது. இதில் ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தில் விவேக்கே கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
அந்த படத்தை அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கியிருந்தார். மற்ற இரண்டு படங்களிலும் (விஸ்வாசம் மற்றும் பிகில்) காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். கடைசியாக விவேக் காமெடியனாக நடித்த படம் ‘தாராள பிரபு’. இந்த படம் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளி வந்தது. இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியிருந்த இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தன்யா ஹோப் நடித்திருந்தார்.
தற்போது, ‘பிக் பாஸ்’ புகழ் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ‘தாராள பிரபு’ படம் தொடர்பாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த ‘தாராள பிரபு’ படத்தினை ‘அமேசான் ப்ரைம்’-யில் பார்த்தேன், நன்றாக இருந்தது. நீங்களும் இந்த படத்தினை பாருங்கள். ஆனால், படம் பார்க்கும் போது எதுவும் குடித்துக் கொண்டே பார்க்காதீர்கள்.
அப்படி குடித்துக் கொண்டே பார்த்தால் அது உங்களது மூக்கு வழியே வெளியே வந்து விடும்” என்று தெரிவித்திருக்கிறார். படம் அந்த அளவிற்கு காமெடியாக இருக்கும் என்பதால் யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இப்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, மீண்டும் ‘தாராள பிரபு’ ரிலீஸ் செய்யப்படுமாம்.