யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை.! தனிமையில் அழுத ஐஸ்வர்யா.! என்ன சொன்னார் தெரியுமா..?

0
841
Bigg-Boss-yashika
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா மற்றும் நடிகை ஐஸ்வார்யா தத்தா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்கால் இவர்கள் இருவரின் நட்பில் கொஞ்சம் பிளவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

yashika

- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கபட்டனர். அதில் யாஷிகா மஞ்சள் அணியிலும், ஐஸ்வர்யா நீல அணியிலும் இருந்தனர். இந்த டாஸ்கின் போது இரு அணிகளுக்கு பல்வேறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டன. இறுதியில் யாஷிகா இருந்த மஞ்சள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்க் முடிந்து சிறிது நேரம் கழித்து யாஷிகா யாரிடமும் பேசாமல் நீச்சல் குளம் அருகில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சென்ற ஐஸ்வர்யா , யாசிக்கவிடம் பேசிய போது

-விளம்பரம்-

ஐஸ்வர்யா:- ஏன் இப்படி சோகமா இருக்க, என்ன ஆச்சி உனக்கு, எங்கள பத்தி கொஞ்சம் யோசி

யாஷிகா :- எனக்கு கவல இல்ல

ஐஸ்வர்யா:- அப்போ உனக்கு எங்கள பத்தி கவல இல்லையா?

யாஷிகா :- எனக்கு யார பத்தியம் கவல இல்ல

ஐஸ்வர்யா:- ரொம்ப ஹுர்ட் பண்ற

யாஷிகா :- நான் ஏதும் ஹுர்ட் பண்ல், நீங்களா எதாவது நெனச்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. எல்லாம் கேம்காக தான் வந்திருக்காங்க

Aishwarya-bigg
யாஷிகா இப்படி சொன்னதை கேட்டு மிகவும் மனம் நொந்து போன ஐஸ்வர்யா படுக்கை அறைக்கு சென்று தனியாக அழுது கொண்டிருந்தார், இதுவரை இவர்கள் இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற டாஸ்கில் இருவரும் எதிரணியில் இருந்து வந்ததனர். அதனால் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்ததால் தான் இவர்கள் இருவருக்கும் இந்த விரிசல் ஏற்பட்டு விட்டது போல தெரிகிறது.

ஏற்கனவே இந்த எங்க ஏரியா டாஸ்கின் போது இந்த டாஸ்கின் நடுவராக இருந்த ஷாரிக்கிற்கும் நடிகை மும்தாஜிற்கும் கொஞ்சம் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஷாரிக்கை தனது பிள்ளை போல பாவித்து வந்த நடிகை மும்தாஜிடம் , ஷாரிக் கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தகக்கத்து.

Advertisement