இந்த இடத்துக்கு வர ரொம்ப உழைத்து இருக்கேன், விபத்திற்கு பின் தன் படம் குறித்து பதிவிட்ட யாஷிகா – ரசிகர்களின் ரியாக்ஷன்.

0
2483
yashika
- Advertisement -

சமீபத்தில் கோர விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா விபத்திற்கு பின் தன் படம் குறித்து முதன் முறையாக பதிவிட்டுள்ளார். கடந்த வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை.

இதையும் பாருங்க : ஜோதிகாவின் முதல் இன்ஸ்டா பிக் ரகசியம் – வைரலாகும் ஜோதிகாவின் ட்ரெக்கிங் வீடியோ.

- Advertisement -

எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் பதிவிட்டு இருந்தார். அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள யாஷிகா சென்னையில் தனது தோழி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். யாஷிகா விபத்தில் சிக்கியுள்ளதால் அவரை கமிட் செய்த தயாரிப்பாளர்கள் குழம்பி போய்யுள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் விபத்திற்கு பின்னர் யாஷிகா, தான் நடித்துள்ள படம் குறித்து முதன் முறையாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். நடிகை யாஷிகா, இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்து வரும் ‘கடமையை செய்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்து நாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா ’ என்ற படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் இயக்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த யாஷிகா, ஒரு பக்க வாழ்க்கை மிகவும் உணர்ச்சியற்றதாகவும் காயப்படுத்துகிறது. மறுபக்கம் வாழ்க்கை தொடர வேண்டும்.

இந்த நிலையை அடைவதர்க்கு பல வருட கடின உழைப்பு தேவைப்பட்டது. எனக்கு உறுதுணையாக இருந்த எஸ் ஜே சூர்யாவிற்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த பலர் இனிமேலாவது குடிச்சிட்டு வண்டி ஓட்ட வேண்டாம், இதில் இருந்து பாடம் கற்றுக்கொள் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Advertisement