கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கும் வேலையில் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய சுஜா வருனீ.!
யாஷிகா ஆனந்த் அடிக்கடி சர்ச்சையான சில பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளவாது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அடுத்த மாதம் வரும் தனது பிறந்தநாளை தற்போதே கொண்டாடியுள்ளார்.
என்னதான் படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இபப்டி ஒரு மாதத்திற்கு முன்னாள் பிறந்தநாள் கொண்டாடுவதெல்லாம் ரொம்ப ஓவர் என்று ரசிகர்கள் யாஷிகாவை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே, யாஷிகாவை லைவ் சாட்டில் அவரது நண்பர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.