தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து விளங்கியவர் நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. கவுண்டமணி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார்.
இவருடைய காமெடி இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலை இருந்தது. இவர் 1964 ஆம் ஆண்டு தான் திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.
இதையும் பாருங்க : எப்படி இருந்த நகுல், இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்க.ப்பபா.
இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் 10 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவர் படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர், நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். நடிகர் கவுண்டமணி அவர்கள் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு சுமித்ரா, செல்வி என்ற இரு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட சோசியல் மீடியாவில் நடிகர் கவுண்டமணி மகள் சுமித்ரா அவர்கள் சமூக சேவை செய்து வருகிறார் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடிகர் கவுண்டமணியை வைத்து நடிகர் தனுஷ் படம் இயக்கப் போவதாகவும் சோசியல் மீடியாவில் பரவியது.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளார்கள். இந்த புகைப்படம் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.
இதில் கவுண்டமணி அவர்கள் முன்பை விட தோல் சுருங்கிய நிலையில் மிகவும் வயதானவராக காட்சி அளித்து இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கவுண்டமணிக்கு வயதாகிக் கொண்டே வருகிறது என்றும் கூறி வருகிறார்கள்.