நடு ராத்திரியில் தன் தங்கை மற்றும் நாயுடன் நீச்சல் குளத்தில் நீராடிய யாஷிகா. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்.

0
683
yashika
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : இது ஜூலியின் ‘ஊ சொல்றியா மாமா’ வெர்ஷன் – கடற்கரையில் ஜூலி வெளியிட்ட வீடியோ. (என்னடா இது சமந்தாக்கு வந்த சோதன)

- Advertisement -

விபத்தில் இருந்து மீண்டு வந்த யாஷிகா :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் நெகிழ்ந்து போனார்கள்.

குறையாத ஹேட்டர்ஸ்கள் :

அதே போல விபத்திற்கு பின்னர் யாஷிகா பெரும்பாலும் தன்னுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். ஆனால், சமீப காலமாக தான் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் இவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் சொன்னாலும் இவரது ஹேட்டர்ஸ்கள் இன்னமும் இவரை திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

நீச்சல் குளத்தில் நாயுடன் குளியல் :

ஆனாலும் தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் யாஷிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் தங்கை மற்றும் வளர்ப்பு நாயுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டு இருக்கிறார் யாஷிகா. அதில் இருந்து சில புகைப்படங்கள் இதோ.

ஹேட்டர்ஸ் களுக்கு பதிலடி :

This image has an empty alt attribute; its file name is 1-139-581x1024.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் யாஷிகா தன் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்ஸில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் , அந்த வீடியோவில் படுக்கையில் உருண்டு கொண்டு இருக்கும் யாஷிகா ‘நடந்து கொண்டு இருப்பதை நம்புங்கள், அனைத்தும் நன்றாக நடக்கும். என்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு என்னால் உருண்டு புரண்டு படுக்க முடிகிறது அதனால் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன் இதுவே எனக்கு சாதனைதான்’ என்று பதிவிட்டிருந்தார் யாஷிகா.

Advertisement