என்ன மின்னிச்சிடு பவானி – விபத்துக்கு பின் யாஷிகா போட்ட முதல் பதிவு. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
1701
yashika
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார். மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன் இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன் நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்.

இதையும் பாருங்க : அட, நம்ம மொக்கச்சாமி மதுரை மாட்டுத்தாவனியில் இப்படி ஒரு வியாபாரம் செய்பவரா – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி வந்து விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல நாளை யாஷிகாவின் பிறந்தநாள் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் தான் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும். என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு. என்றாவது ஒரு நாள் என்னை மன்னித்துவிடு என்று பதிவிட்டிருக்கிறார்

-விளம்பரம்-

யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் யாஷிகாவிற்கு ஆறுதல் சொன்னாலும் பெரும்பாலானோர் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும், உங்கள் பிறந்தநாளை பற்றி இப்போ யார் கேட்டது என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த பதிவு இரங்கல் பதிவு போல தெரியவில்லை. உங்கள் மேல் உள்ள தவறை மறைக்க போட்ட பதிவு போல தான் இருக்கிறது என்றும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement