இரண்டு காலிலும் கட்டு, சிறு நீர் போக பைப், சோறூட்டும் அம்மா – பரிதாபமான நிலையில் யாஷிகா வெளியிட்ட முதல் புகைப்படம்.

0
4572
yashika
- Advertisement -

சமீபத்தில் கோர விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா விபத்திற்கு பின் தன் படம் குறித்து முதன் முறையாக பதிவிட்டுள்ளார். கடந்த வாரங்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது.

- Advertisement -

ஆனால் நல்லவேளை முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை என்றும் கூறி இருந்தார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்.

சமீபத்தில் தன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் காலில் இருக்கும் காயத்திற்கு கட்டு போட்டு இருப்பது போன்றும் அவர் அருகில் ஒரு நாய்க்குட்டி இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. அதே போல அவர் சிறு நீர் போவதற்கு கூட பைப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement