தான் ஆசைப்பட்டபடி முடியை வெட்டிய நிரூப் – முன்னாள் காதலி யாஷிகா போட்டுள்ள கமெண்டை பாருங்க.

0
493
niroop
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாளில் பிக் பாஸ் பட்டத்தை தட்டி செல்பவர் யார் என்று தெரிந்து விடும். தற்போது பாவனி, பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 18 பேருடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி பின்னர் 2 வைல்டு கார்டு என்ட்ரியுடன் 20 பேர் கொண்ட நிகழ்ச்சியாக மாறியது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-93.jpg

அதில் நிரூப்பும் ஒருவர். ஆரம்பத்தில் நிரூப் மிகவும் சவாலான போட்டியாளராக தான் இருந்தார். ஆனால் கடைசி 4 வாரங்களில் இவரது பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதிலும் குறிப்பாக இவர் பிரியாங்காவை டார்கட் செய்து அடிக்கடி சண்டையிட்டு வந்தது இவரது பெயருக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்தது. இருப்பினும் எப்படியாவது இறுதி போட்டி வரை வந்துவிட வேண்டும் என்று எண்ணினார்.ஆனால், Ticket To finale டாஸ்க்கில் இவரை முதல் சுற்றிலேயே வெளியில் அமர்த்திவிட்டனர்.

- Advertisement -

நேரடியாக இறுதி போட்டிக்கு சென்ற நிரூப் :

இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி போட்டியாளராக அறிவிக்கப்பட்டார் நிரூப். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே நிரூப் நீளமான முடியுடன் தான் இருந்து வந்தார். மேலும், ஒரு டாஸ்கின் போது கூட அபிநய் இவரது முடியை கொஞ்சம் வெட்ட வைத்தார். இதனால் கடுப்பான நிரூப், நான் இந்த முடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுக்க வளர்த்து வருகிறேன் என்று அவரிடம் சண்டை போட்டார்.

முடியை வெட்டிய நிரூப் :

அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் போட்டியாளரும், இவரின் முன்னாள் காதலியுமான யாஷிகா வந்த போது கூட முடியை வெட்டு, இது நல்லாவே இல்லை என்று போகும் போது கூறிவிட்டு தான் சென்றார். ஆனால், அப்போதும் நிரூப் முடியை வெட்டவில்லை. இப்படி ஒரு நிலையில் நிரூப் தன் முடியை வெட்டி கொண்டு இருக்கிறார். இறுதி போட்டி நெருங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள ஸ்டைலிஸ்ட்டுகளை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-50.png

நிரூப்பை கண்டு ஷாக்கான போட்டியாளர்கள் :

இதில் அனைவரும் முடி வெட்டிக்கொண்டனர். ஆனால், நிரூப் மட்டும் தன் முடியை புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக வளர்த்து வருவதாக மீண்டும் நினைவுபடுத்தினார்.இருப்பினும் பிக் பாஸ், உங்களின் இன்னோரு முகத்தை மக்களுக்கு காட்ட வேண்டிய நேரம் இது உங்கள் முடி கண்டிப்பாக கேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்த பின்னரே நிரூப்பும் ஒப்புக்கொண்டு முடியை வெட்டிக்கொண்டார். பின் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிரூப்பின் புதிய லுக்கை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.

நிரூப்பின் புதிய லுக் பற்றி யாஷிகா :

போட்டியாளர்கள் வியந்தது போல பார்வையாளர்களும் நிரூப்பின் புதிய லுக்கை பார்த்து வியந்தனர். அதற்கு காரணம் நிரூப் அந்த அளவிற்கு படு ஸ்டைலாகவும் ஹாண்ட்சமாகவும் இருந்தார். நிரூப்பின் இந்த புகைப்படத்தை விஜய் டிவி தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. அதில் கமன்ட் செய்துள்ள நிரூப்பின் முன்னாள் காதலியும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் ‘ஒரு வழியாக, இது 1000 மடங்கு நல்லா இருக்கு’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement