அவர் படத்துல background- ல நடிச்சா கூட போதும். யாஷிகா ஆனந்த் ஓபன் பேட்டி.

0
1826
yashika

தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், சமீபத்தில் அஜித் குறித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அந்த ட்வீட்டில் அஜித் ட்விட்டரில் சேர வேண்டும் என்று நானும் மிகவும் ஆசைப்படுகிறேன். என்னைப் போன்று எண்ணம் வேறு யாருக்கு இருக்கிறதா ? என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் எங்களுக்கும் வேண்டும் என்று ஆசைதான் என்று கமன்ட் செய்து இருந்தனர். இந்த நிலையில் நடிகை யாஷிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதில், நீங்கள் யாருடைய ரசிகை என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நான் தல ரசிகை என்று கூறிய யாஷிகா, அவரது படத்தில் background காட்சியில் நடித்தால் கூட போதும் என்று கூறியுள்ளார். இந்த வீடீயோவை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே சமூக வலைதளத்தில் யாஷிகா, தனது ரசிகர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர், ர், நீங்கள் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று கூற, அதற்கு யாஷிகா ‘நீங்கள் அவரிடத்தில் போய் சொல்லுங்க, அவருடன் நடிக்க நான் நடிக்க மிகவும் ஆசை படுகிறேன் என்று. அப்போதுவது அவர் கேட்பார்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-


Advertisement