அப்பா, போட்ட போட்டோ எல்லாம் கைவிடல. முரட்டு இயக்குனரின் வாய்ப்பால் நிம்மதியடைந்த ஷாலு.

0
29932
shalu-shammu
- Advertisement -

ஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள் ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன விடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்திகேயன் நடித்த ‘வறுத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அப்போதும் முதல் அம்மணி இளசுகளின் லேட்டஸ்ட் சென்சேஷனாக மாறி விட்டார். எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.

இதையும் பாருங்க :ஈஸ்வர்- மஹாலக்ஷ்மியை தொடர்ந்து,அடுத்த பஞ்சாயத்தை துவங்கிய பகல் நிலவு ஜோடிகள். புலம்பும் மனைவி.

இந்த நிலையில் அம்மணி பதிவிட்ட புகைப்படங்கள் எல்லாம் வீணாகவில்லை. ஆம், தற்போது அம்மணி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதே போல முதல் பாகத்தில் நடித்த யாஷிகா இந்த படத்தில் நடிக்க வில்லையாம். அதற்கு முக்கிய காரணமே தற்போது யாஷிகாவின் மார்க்கெட் ஏறிக்கொண்டே வருவதால் இந்த படத்தில் நடிக்க அம்மணி அதிக சம்பளம் கேட்டாராம். இதனால் யாஷிகாவை கழட்டி விட்டுவிட்ட ஷாலு ஷம்முவை தட்டி தூக்கியுள்ளார் முரட்டு இயக்குனர்.

-விளம்பரம்-
Image result for iruttu arayil murattu kuthu director

மேலும், இந்த படத்தை இயக்கும் சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடிக்க உள்ளாராம். ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம். மேலும், பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை அதாவது மே மாதம் இந்த படத்தை வெளியிட குறிவைத்து தயாரிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement