ஒரு அப்பாவியா கொன்னுட்டு நீ ஏன் பொழச்ச சாவுடி – திட்டி தீர்த்த நபருக்கு யாஷிகா கொடுத்த பதில்.

0
1866
yashika
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விபத்துக்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை நீக்கியுள்ளார். மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன் இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து என்னை காப்பாற்ற இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை படிப்பது என்பது தெரியவில்லை ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன் நீ என்னை மன்னிக்க மாட்டார் என்பது தெரியும் என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்.

இதையும் பாருங்க :குளித்து முடித்து ஈரமான குளியல் துண்டில் பிரஷ்ஷாக வீடியோ வெளியிட்ட கிரண்.

- Advertisement -

ஆனால், உன்னை ஒவ்வொரு நொடியும் மிஸ் செய்வேன். வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி வந்து விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன். ஒருநாள் உன்னுடைய குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். என்றும் உன்னுடைய நினைவுகளை நினைத்து பூரிப்படைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இவரை பலர் திட்டி தீர்த்து வருகின்றனர். அதில் ஒருவர், சாவுடி அப்பாவி பொண்ணு கொன்னுட்டு நீ எதுக்கு பொழச்சி, பெரிய புடுங்கி மாதிரி வாக்குமூலம் கொடுத்து இருக்க உன்னுடைய நண்பரை கொன்னுட்டு நீ உயிரோட இருக்கிற தூக்கு மாட்டி சாவு என்று படு மோசமாக ததிட்டு தீர்த்து மெசேஜ் அனுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்த யாஷிகா, என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியும் வருந்தும்படி செஞ்ச சோசியல் மீடியாவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மற்றொரு பதிவில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி நான் உண்மையில் வாழ விரும்பவில்லை ஆனால் நீங்கள் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் நான் விரைவில் வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் யாஷிகாவின் இந்த பதிவை பார்த்த பலர் அவருக்கு ஆறுதல் சொல்லி வந்தாலும் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement