சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சக போட்டியாளர் விஜி வாழ்த்து சொல்லாமல், தன் Boyfriendக்கு வாழ்த்து சொல்லியுள்ள யாஷிகா.

0
33955
yashika
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது விஜய் டிவி சீரியலுக்கு டப் கொடுக்கும் சீரியல்களை ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் எந்த சரக்கும் ஜீ தமிழிடம் இல்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டி கொடுக்கும் வகையில் ‘Survivor’ என்ற புதிய ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அர்ஜுன் அறிவிக்கப்பட்டு இருந்தது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது, வெளிநாட்டில் ஒளிபரப்பான ‘Survivor’ நிகழ்ச்சிக்கு இணையாக இந்த ஷோ இருக்குமா என்ற கேள்வி நிலவியது.

இதையும் பாருங்க : உங்க கணவர் என்ன சொன்னார் – குஷ்பூவை திருமணம் செய்துகொள்ள மீண்டும் கேட்ட நபர். குஷ்பூவின் பதில்.

- Advertisement -

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோ அந்த சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்துள்ளது. இந்த ஷோவில் விஜயலக்ஷ்மி, பிகில் பட நடிகை காயத்ரி, ஸ்டண்ட் மாஸ்டர் பெசன்ட் நகர் ரவி, விக்ராந்த், ஸ்ரிஷ்டி டாங்கே, vj பார்வதி, நடிகர் நந்தா, தம்பி ராமய்யா மகன் உமாபதி என்று பலர் பங்கேற்க இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உமாபதிக்கு யாஷிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

umapathi

அதில் ‘வாழ்த்துக்கள் செம்பியன் உமாபதி, நீ ஜொலிக்கப்போகும் நேரம் இது’ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், பிக் பாஸில் தன்னுடைய சக போட்டியாளரான விஜயலக்ஷ்மிக்கு யாஷிகா வாழ்த்து சொல்லவில்லை. உமாபதி குறித்து யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அவர் என்னுடைய பாய் பிரென்ட் என்று கூறி இருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூட கிசுகிசுக்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தகத்து.

-விளம்பரம்-
Advertisement