விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இலங்கையை சேர்ந்த மாடல் அழகனான தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நடிகை சனம் ஷெட்டி யுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி அளித்த புகாரை அடுத்து, தர்ஷன் சனம் ஷெட்டி விவகாரம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தர்ஷனுக்கு எந்த வகையான தண்டனை கிடைக்கும் என்று சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் சுதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள அவர். மொத்தம் 5 பிரிவுகளில் தர்ஷன் மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது பண மோசடி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான குற்றம், நம்பிக்கை துரோகம், தவறுதலாக பேசுதல் என்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், தர்ஷன் சனம் ஷெட்டி லிவிங் டு கெதர் முறையில் வாழ்த்துள்ளனர், அவர்கள் இருவரும் ஒரு காதலர்கள் எப்படி இருப்பார்களோ நெருக்கமான புகைப்படங்களை என்னிடம் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் அவர் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர்.
இதையும் பாருங்க : கடற்கரையில் பிகினி உடையில் போஸ். ஷாக் கொடுத்த சாமுராய் பட நடிகை.
மேலும் தர்ஷனுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பதை என்னிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்கள் அதனால் அவர் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் செய்த தவறுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டார். எனவே, என்னுடைய கட்சிக்காரர் என்ன சொல்கிறார் அதைத்தான் நான் சொல்ல முடியும் மேலும் தர்ஷன் மன்னிப்பு கேட்டாலும் அவருக்கான தண்டனை அவர் அனுபவிக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிவிட்டார்.
எனவே, 420 பொறுத்தவரை 7 வருட சிறை கண்டிப்பாக இருக்கிறது. மேலும், பெண்களை துன்புறுத்தள் பிரிவில் ஒரு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருகிறது. எனவே, 7 வருட சிறை அவருக்கு கண்டிப்பாக தண்டனை இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை சனம் ஷெட்டி என்னிடம் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர். மேலும், இந்த பேட்டியில் ஒரு சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் சுதன்.