பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 ஆம் சீசன் போட்டியாளர்கள் அனைவருக்கும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி பௌலில் கையில் ஏந்திக் கொண்டு ஒரு வட்ட மேடையில் நடந்து வர வேண்டும். ஒவ்வொரு முறை பஸ்ஸர் ஒளித்தவுடன் யாரது பௌலில் தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அவரகள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார் என்பது தான் டாஸ்க்.

Advertisement

இந்த டாஸ்கின் முதல் நாளில் பாலாஜி, ஐஸ்வர்யா, ரித்விகா, மும்தாஜ் ஆகியோர் வெளியேறி விட்டனர். பின்னர் நேற்று (செப்டம்பர் 14) இந்த டாஸ்கில் விஜயலக்ஷ்மி, ஜனனி, யாஷிகா ஆகியோர் இருந்த நிலையில் விஜய்லட்சுமியும் வெளியேறினார். இறுதியில் யாஷிகா மற்றும் ஜனனிக்கு கடுமையான போட்டி நிலவியது.

இந்த டாஸ்கில் யாஷிகாவிற்கு தான் ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால். போட்டியாளர்கள் பெரும்பாலும் ஜனனிகு தான் ஆதரவாக உற்சாகம் செய்து வந்தனர். இந்த டாஸ்கின் முதல் முடிவில் இருவருமே வீட்டுக்கொடுக்காமல் இறுதி வரையில் விளையாடி வந்தனர்.ஆனால், யாஷிகா தோற்றதற்கு ஆரவ்வும் முக்கிய காரணமாக இருந்தார்.

Advertisement

Advertisement

*இந்த டாஸ்கில் இறுதி பஸ்ஸர் ஒளித்தபோது இருவரின் பௌலிலும் தண்ணீரின் அளவு சமமாக இருந்த்ததால் ஆர்வ் இருவருமே வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவித்துவிடுகிறார். ஆனால், உண்மையில் அப்போது யாஷிகாவின் பௌலில் தான் அதிமாக தண்ணீர் இருந்தது போல தெரிந்தது.

* ஆராவை கண்பேஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் ஜனனி மற்றும் யாஷிகாவிற்கு மீண்டும் ஒரு கடுமையான விதியை கூறுகிறார். அதில் இம்முறை ஒரு கையை பின்னால் கட்டியவாறு ஒரு கையால் மட்டும் தான் பௌலை துக்க வேண்டும் என்றும் உடலில் எந்த ஒரு இடத்திலும் கையை ஊன்ற கூடாது என்றும் விதியிடுகிறார்.

* இதன் பின்னர் யாஷிகா மற்றும் ஜனனி மீண்டும் அந்த வட்ட மேடையில் நடிக்கின்றனர். இருவரும் ஒரு கையால் பௌலை பிடித்திக்கு கொண்டு நடக்க ஆரம்பிகின்றனர் அப்போது ஜனனியின் கை நடுங்கி முக்கால் வாசி தண்ணீர் கீழே சிந்திவிடுகிறது. அப்போது ஜனனி தனது இடது கையை பயன்படுத்தி வலுது கையை ஊன்றி நடுக்கத்தை நிறுத்தி பௌளை மேலே தூக்கி விடுகிறார். அப்போது ஆரவ் எதுவம் கண்டிக்க வில்லை. ஜனனி இரண்டு கையையும் பயன்படுத்திய பின்னர் தான் சுஜா மற்றும் ஆர்த்தி இரு கையை பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றனர்.

* இதையடுத்து யாஷிகாவும் தனது இரு கையை பயன்படுத்த முயற்சிப்பதற்கு முன்பாகவே ஆரவ், யாஷிகா இரண்டு கையை யூஸ் பண்ண கூடாது என்று பல முறை எச்சரித்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பிடிப்பை இழந்த யாஷிகா பௌளை கீழே விட்டு விடுகிறார்.இதனால் கோல்டன் டிக்கெட் ஜனனிக்கு கிடைத்து விடுகிறது.

* ஒரு வேலை யாஷிகா, ஜனனியை போல இரண்டு கையை பயன்படுத்தி பௌலை தூக்கி நிறுத்தி இருந்தால் கண்டிப்பாக யாஷிகா இந்த டாஸ்கில் வெற்றி பெற்று இருந்திருப்பார். ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்த ஆரவ்விடாததால் அது யாஷிகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்த்து.

யாஷிகா தனிப்பட்ட விடயத்தில் எப்படியோ என்று தெரியாது ஆனால், டாஸ்க் என்று வந்து விட்டால் யாஷிகா மிகவும் கடுமையாக போட்டியிடுவார்.அதே போல ஆரவ்வின் பார்வையும் முழுக்க முழுக்க யாஷிகாவின் மீது தான் இருந்தது. அவர் Body contact மூலம் கோப்பையை சரிசெய்ய முயலும் முன், ஆரவ் அதை தகர்த்து விடுகிறார்.இதனால் தான் யாஷிகா தோற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

Advertisement