பிக்பாஸ் சக்ஸஸ் மீட்.! கமல் கொடுத்த பார்ட்டியில் மது.! வெளியான புகைப்படம்.!

0
977

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்று கிழமையுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த சீசனில் ரித்விகா வின்னராகவும், ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஐஸ்வர்யா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

bigg-boss

- Advertisement -

கோலாகலமாக முடிந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கமல் அவர்கள் போட்டியாளர் அனைவருக்கும் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். மேலும், நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டது போலவே போட்டியாளர் அனைவருக்கும் புதிய விவோ ஸ்மார்ட் போனையும் அன்பளிப்பாக வழங்கினார்.

சமீபத்தில் இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் யாஷிகா, ஐஸ்வ்ர்யா, மும்தாஜ், மமதி சாரி, அனந்த் வைத்யநாதனை தவிர மற்ற அனைவரும் இருக்கின்றனார். மேலும், இந்த பார்ட்டியின் போது மதுக்களும் பரிமாறபட்டுள்ளது. அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களுக்கு சரி அந்த சீசனை தொகுத்து வழங்கிய கமலுக்கும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானமும் ஆதரவும் இருந்து வந்தது. ஆனால், இந்த சீசனில் இருந்த அத்தனை போட்டியாளர்களில் ஒருவர் கூட ரசிகர்களின் அபிமானத்தை பெறவில்லை. மேலும், பிக் பாஸ் செய்த சில தெள்ளமுள்ளுக்கு கமலும் உடந்தையாக இருந்தார் கமல் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு அவரது அவரது அரசியலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் நடிகர் கமல் கலாச்சாரத்தை பற்றியும் ஒழுக்கத்தை பற்றியும் பேசிய கமல், போட்டியாளர்களுக்காக மது பார்ட்டி வைத்துள்ளது சற்றும் ஏற்றுக்கொள்ளாதா ஒரு விடயமாக உள்ளது. சமுதாயத்தில் ஒரு சிறப்பான அந்தஸ்தில் இருக்கும் கமல் பிக் பாஸ் 2விற்கு பிறகு அந்த இடத்தில் இருந்து ஒரு படி கீழே தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

Advertisement