அவனுங்கள சும்மா விட மாட்டேன் இன்னும் வெறியாத்தான் இருக்கேன்- பிக் பாஸ் அர்னவின் ஆவேச பேட்டி

0
292
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்னவ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 23 நாட்கள் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வந்து விட்டார். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவராக அர்னவ் இருக்கிறார். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து அன்சிதாவிற்காக சப்போர்ட் செய்து பேசிக்கொண்டு இருந்தார். அர்னவ் வெளியேறி இருந்த போது அன்ஷிதா பயங்கரமாக கதறி கதறி அழுந்திருந்தார். பின் அர்னவ், எல்லோருமே ஜால்ரா பாய்ஸ். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க என்று பேச, விஜய் சேதுபதி கண்டித்து பேசி இருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் அர்னவ், ஒரு வாரத்தில் எல்லோரையும் எனக்கு புரிந்து கொள்ள டைம் ஆனது.

அர்னவ் அளித்த பேட்டி:

நான் பிக் பாஸ் கொடுத்த எல்லா டாஸ்குகளிலும் கலந்து கொண்டேன். ஆனால், என்னை யாருமே பாராட்டவில்லை. என்னை டார்கெட் பண்ண ஆரம்பித்தார்கள். நம்ம சொல்றத இவன் கேட்க மாட்டேன் என்று என்னை ஒதுக்கினார்கள். நான் ஜால்ராவாக இருக்கக்கூடாதுன்னு தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே வந்தேன். நான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அன்று ஆண்கள் எல்லோருமே எனக்கு ஐந்து அவார்டுகள் கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

அதுதான் ட்ரிகர் ஆகிவிட்டது. பின் நான் அந்த எபிசோடு முடியட்டும். நாளைக்கு அவங்களை வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக வெளிவந்து விட்டேன். அங்கு சில விஷயங்கள் உண்மையாகத்தான் நடந்தது. சாச்சனா வெளியே போன போது நான் அழுததெல்லாம் உண்மைதான். ஒருவேளை எலிமினேஷன் ஆகாமல் இருந்திருந்தால் சம்பவம் நடந்திருக்கும். வைல்ட் கார்ட்டில் வீட்டுக்குள் போகும் வாய்ப்பு கிடைத்தால் பசங்க எல்லார் மூஞ்சும் செத்திடும்.

ஆண்கள் அணி குறித்து சொன்னது:

மேடையில் விஜய் சேதுபதி சார் சொன்னாரு என்று தான் பேசினேன். ஆனால், பசங்களை நான் பேசினதெல்லாம் எனக்கு சரியாகத்தான் பட்டது. சார் தடுக்கவில்லை என்றால் உங்களுக்கு ஏதோ நல்ல நேரம் வெளியே வந்துட்டேன் என்று சொல்லி இருந்திருப்பேன். அவனுங்களையும் சும்மா எல்லாம் விடமாட்டேன். இன்னமும் வெறியாத் தான் இருக்கிறேன். விஷால் சொன்னா அருண் கேட்பான், தீபக் சொன்னா சத்யா கேட்பான். ஏன்னா இவங்க முன்னாடியே நண்பர்கள். சுனிதாவால் அன்சிதா வெளியில் தெரியவில்லை. அன்ஷிதாவை விட சுனிதா தான் ஒரு ஸ்டெப் மேல தெரிகிறாள். இந்த வாரம் அன்சிதா பிக்பாஸில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று நினைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement