அதை ஞாபகப்படுத்த தான் தளபதி சைக்கிளில் வந்திருப்பார். அதன் குறீயிடு இதான். ஆரி சொன்ன நச் பதில்.

0
1206
aari
- Advertisement -

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று முடிந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டுஇருந்தது . தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

-விளம்பரம்-
ajith

மக்களை போலவே ரஜினி, கமல், விஜய் , அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம் என்று பல முன்னணி நடிகர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். என்னதான் அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் வாக்களித்தாலும். இந்த தேர்தலில் விஜய் மற்றும் அஜித் வோட்டு போட்டது தான் பேசும் பொருளானது. செல்பி எடுக்க வந்த ரசிகர்கரின் செல்போனை அஜித் புடிங்கியது பெரும் பேசும் பொருளானது.

- Advertisement -

ஆனால், அஜித்தை மிஞ்சும் விதமாக வாக்களிப்பதற்க்காக விஜய் சைக்கிளில் வந்தது தான் அன்றைய தினத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பெட்ரோல் விலையை கண்டித்து தான் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார் என்றும், அதே போல அவர் வந்த சைக்கிள் சிகப்பு மற்றும் கருப்பு நிறமாக இருந்ததால் அவர் தி மு கவிற்கு தான் ஒட்டு போட்டார் என்றும் கிளப்பிவிட்டனர். ஆனால், வாக்கு சாவடி மிகவும் அருகில் இருந்ததால் தான் விஐய் சைக்கிளில் வந்தார் என்று விஜய் தரப்பு தெரிவித்தது.

Vijay

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆரியிடம், தேர்தலின் போது விஜய் மற்றும் அஜித் பற்றி வெளியான செய்திகள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது விஜய் பற்றிய கேட்டதும் சற்று சிரித்த ஆரி, வாழ்க்கைல சைக்கிள் ஒன்னு இருக்கு அத பயன்படுத்தனும், எல்லாரும் பொது போக்குவரத்த பயன்படுத்தனும்னு கூட அவர் அப்படி வந்திருக்கலாம். தளபதி சைக்கிள்ன்னு ஒன்னு இருக்கு அதன் குறியீடாக அதை பார்க்கலாம் என்று கூறினார்.

வீடியோவில் 3 : 50 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அதே போல அஜித்தின் செல்பி சர்ச்சை குறித்து பேசிய ஆரி, அஜித் அந்த ரசிகருடன் சாரி கேட்டுவிட்டு செல்போனை திருப்பிக் கொடுத்த அந்த பண்பையும் நீங்கள் பார்க்கவேண்டும் பிரபலங்கள் வெளியில் வரும்போது ரசிகர்கள் அதிக அன்பினால் இதுபோன்று செய்து விடுகிறார்கள் ஆனால் தேர்தல் மாதிரியான நேரத்தில் தலையைநாம் பாராட்ட வேண்டும். அவ்வளவு கூட்டத்திற்கு நடுவே அந்த நபரை அழைத்து போனை கொடுத்ததையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஆரி.

Advertisement