அவங்ககிட்ட வாங்குன காச விட கூட இவ்ளோ ரூபா கொடுத்து இருக்கேன் – கிருபா விஷயத்தில் விக்ரமன் விளக்கம்.

0
2333
- Advertisement -

கிருபா முனுசாமி விவகாரம் குறித்து விக்ரமன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். இவர் முதலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் பின் தான் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். அதன் மூலம் இவர் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் விக்ரமன் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் விக்ரமன் மீது கிருபா என்பவர் புகார் கொடுத்து இருந்தார். அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் கிருபா முனுசாமி. இவரை விக்ரமன் காதலித்து ஏமாற்றியதாகவும், இவரிடம் விக்ரமன் காசு வாங்கி ஏமாற்றியதாகவும், விக்ரமன் ஐ லவ் யூ என்று சொன்ன ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பு அடைந்தார்.

- Advertisement -

இதை அடுத்து தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், என் மீது கிருபா முனுசாமி என்பவர் கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளும் நான் மறுக்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும்தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி எல்லாம் செய்கிறார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன். அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் இதோ இணைத்து இருக்கிறேன் என்று கிருபா எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்து இருந்தார்.

மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து விக்ரமன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்னாடி எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நண்பர்களாகத்தான் நாங்கள் இருவரும் பேசி பழகினோம். அப்போது எனக்கு நட்பு முறையில் தான் பணம் தேவைப்பட்டது. அவர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கினேன். அது உண்மைதான். அப்படி வாங்கின பணத்தை என்னிடம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்துவிட்டேன். இந்த தேதிக்கு வரைக்கும் கணக்கு போட்டால் நான் அவர்களிடம் வாங்கியதை விட அதிகமாக ஐம்பதாயிரம் ரூபாய் கூடுதலாகவே கொடுத்திருக்கிறேன்.

-விளம்பரம்-

நான் பணம் திருப்பி கொடுத்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நியாயப்படி பார்த்தால் அவர் தான் எனக்கு பணத்தை திருப்பி தர வேண்டும். அதனால் பணம் மோசடி குறித்து அவர் என் மீது கொடுத்த புகாருக்கு அர்த்தமே இல்லை. எமோஷனல் டார்ச்சர் தந்ததாக சொல்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருப்போம் என்று தான் பழகிருந்தோம். திடீரென்று அவர்கள் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பின் அவர் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் உங்களுடன் பழகவில்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன்.

ஆனாலும் அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு பிறகும் அவர் நம்ம கல்யாணம் செய்து கொள்ளலாம். பிடிக்கலை என்றால் பிரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் பேசினார். அப்போது இருந்தே அவர்களை விட்டு விலகத் தொடங்கினேன். என் மீது கோபத்தை வெளிப்படுத்த தான் இப்படி எல்லாம் செய்கிறார். நாங்கள் பேசின ஸ்கிரீன் ஷாட் எல்லாம் அவர்கள் வெளியிட்டதனால்தான் நான் அவர்கள் எனக்கு பிரைவேட் ஆக எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதோடு வேறு சில பெண்களையும் நான் ஏமாற்றி விட்டேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். சொல்ல போனால், கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பட்டியல் என்னிடம் நிறைய இருக்கிறது. இவர் ஏற்கனவே லிவிங் ரிலேஷனில் இருந்திருக்கிறார். இப்பதான் எனக்கு அதெல்லாம் தெரிய வருகிறது. என்னால் அந்த பட்டியலை கூட வெளியிட முடியும். ஆனால், அவங்க நடந்து கொண்ட மாதிரி எனக்கு நடக்க விருப்பமில்லை. நான் பல பெண்களை ஏமாற்றி விட்டதா அவர்கள் சொல்ற குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இதைப்பற்றி நான் இன்னும் பேச விருப்பமில்லை. எனக்கு நிறைய அரசியல் பணிகள் இருக்கிறது. நானும் சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement