பழிக்கு பழி..! பாலாஜிக்கு கிடைத்த வெற்றி..! ஐஸ்வர்யாக்கு நடந்த சோகம்..!

0
255

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவியாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு இந்த ‘சர்வாதிகார ராணி ‘டாஸ்க் வழங்கபட்டிருந்தது. இந்த பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. மேலும், டாஸ்க்கை சிறப்பாக முடித்தால் அவருக்கு அடுத்த வாரம் நோமினேஷனில் இருந்து தப்பிக்கும் சூப்பர் பவர் அளிக்கப்படும் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

Aishwarya-dutta

இதை தொடர்ந்து ராணி பொறுப்பை ஏற்ற ஐஸ்வர்யா வஞ்சம் வைத்து தனக்கு அகாதவர்களை பழி தீர்த்துக்கொண்டார்.இதில் பாலாஜிதான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.அதே வேளையில் ரித்விகா,சென்ராயனும் இதற்கு விதிவிலக்கல்ல.இவர்கள் இருவரையும் வஞ்சம் தீர்க்கும் வகையில் டாஸ்க் என்ற பெயரில் வறுத்தெடுத்தார்.ராணி போட்ட கட்டளைகளை சிலர் தகர்த்தனர்,இதிலும் பாலாஜிதான் முதலிடத்தை பிடித்தார்.

இதன் காரணமாக ஐஸ்வர்யா பாலாஜியின் மேல் குப்பைகளை கொட்டி அசிங்கப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாலாஜி செய்வதறியாமல் சோபாவில் அமைதிக்கு பெயர் போனவர் போன்று அமர்ந்திருந்தார்.ஆனால் சற்று நேரம் கழித்து அவரது குணம் வெளியே தெரிய, முகம் மற்றும் , பேச்சில் ஒரு வித மாற்றம் தெரிந்தது, அதாவது கோபம்.இதனால் அவர் உடல்,மண ரீதியாக பாதிக்கப்பட்டார்.இதையறிந்த பிக் பாஸ் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்தார்.

balaji-Bigg-Boss

ராணி மகா ராணி டாஸ்க் பொன்னம்பலத்தால் முடிவுக்கு வந்தது.போட்டியாளர்கள் அனைவரும் ராணிக்கு எதிராக போர்க்கொடி தூக்க, கடைசியாக ஐஸ்வர்யாவை பொன்னம்பலம்,சென்ராயன் கழுத்தை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டனர், இதோடு இந்த டாஸ்க் முடிவடைந்தது.இந்த சம்பவத்தால் உச்சகட்ட கோபத்திற்கு சென்ற ஐஸ்வர்யா பிக் பாஸிடம் முறையிட்டார்.அவர் இருந்த நிலையை பார்த்த பிக் பாஸ், அவர் தன் கட்டுப்பாட்டில் இல்லையென்று தெரிந்துகொண்டார்.இனியும் இது தொடர்ந்தாள் பெரிய அசம்பாவிதம் நேரும் என்று அறிந்த பிக் பாஸ் டாஸ்கை முடித்துக்கொள்ளுமாறு ஐஸ்வர்யாவிடம் கூறினார்.

இந்நிலையில் பொன்னம்பலம் செய்த செயளால் ஐஸ்வர்யா உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் மருத்துவ குழு அவருக்கு சிகிச்சையும் அளித்துள்ளது. பாலாஜிக்கு எதோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் சமீபத்தில் ஒளிபரப்பான மார்னிங் மசாலா வீடியோ ஒன்றில் பாலாஜியின் கையில் பளாஸ்டர் போட பட்டுள்ளது மூலம் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாலாஜிக்கு கண்டிப்பாக ஏதோ ஒரு சிகிச்சையோ அல்லது அவரது பிபி-யை கட்டுப்படுத்த நரம்பில் ஊசியோ போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்தின் செயலால் உச்சகட்ட கோபத்தில் செய்வதறியாமல் பிதற்றினார்.பாலாஜியை காட்டிலும் ஐஸ்வர்யா பைத்தியம் பித்தார் போல் கோபத்தின் உச்சிக்கே சென்றார், இதனால் இவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ட்ரிப்ஸ்(Drips) போடப்பட்டது.