முகத்தை மூடி சென்று விசில் அடித்து படம் பார்த்த இந்துஜா. வைரலாகும் வீடியோ. பிகில் படம் இல்லைங்க பாஸ்.

0
35451
indhuja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். இவர் முதன் முதலாக குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் உடையவராம். அதற்கு பிறகு தான் இவர் 2017 ஆம் ஆண்டு வெளி வந்த மேயாத மான் என்ற திரைப் படத்தில் வைபவ்க்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இந்துஜா மக்களிடையே பரவலாக அறியப்பட்டார். அதோடு இவர் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் 60 வயது மாநிறம், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் திரை உலகில் வந்த கொஞ்ச நாட்களிலேயே நடிகை இந்துஜாவுக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது கூட அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளி வந்து திரையரங்களில் பட்டைய கிளப்பிய பிகில் படத்தில் நடிகை இந்துஜா அவர்கள் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து உள்ளார். மேலும், நடிகை இந்துஜா அவர்கள் இதுவரை நடித்த படங்கள் எல்லாமே குடும்ப பாங்கான பெண்கள் கதாபாத்திரங்கள் தான். அதனாலே இவர் சீக்கிரம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், தற்போது நடிகை இந்துஜா அவர்கள் ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் ஜில் ஜில் ராணி என்ற ஒரு பாடலுக்கு தொப்புள் தெரியுமாறு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இதையும் பாருங்க : அற்பனுக்கு வாழ்வு வந்தால் ஆம்பளையா வச்சி குடைபிடிப்பீங்களா. யாஷிகாவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.

- Advertisement -

இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ஆரவாரம் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை இந்துஜா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி உள்ளார். நடிகை இந்துஜா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வந்தார்கள். மேலும், ரஜினிகாந்த் பிறந்த நாளன்று தியேட்டர்களில் அவருடைய படங்களை போட்டு உள்ளார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் படத்தை பார்க்க நடிகை இந்துஜா அவர்கள் தன் முகத்தை மூடிய படி ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை பார்க்க சென்று உள்ளார். மாஸ் படத்தின் அறிமுக பாடலானா “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” என்ற பாடல் வரும் போது நடிகை இந்துஜா அவர்கள் ஆரவரமாக கத்திக் கொண்டும், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும் உள்ளார். இதனை வீடியோவாக எடுத்து உள்ளார்கள். பின் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை இந்துஜா அவர்கள் பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் கூட நடிகை இந்துஜாவை குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. பின் அதற்கு அவர் விளக்கம் கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement