குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித். இணையத்தில் வைரலாகும் வீடியோ.

0
76641
shalini-ajith
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஷாலினி அவர்கள் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியில் பிறந்தார். மேலும்,நடிகை ஷாலினியின் அப்பா பெயர் பாபு, அம்மா பெயர் அலிஸ் ஆகும். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ஆகும். இவர்கள் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள். அதோடு நடிகை ஷாலினிக்கு பேட்மிட்டன் விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவர்.

இதையும் பாருங்க : அப்போ ‘வலிமை’ படத்தில் இரண்டு அஜித்தா. இணையத்தில் லீக்கான அஜித்தின் புதிய லுக்.

- Advertisement -

ஷாலினி அவர்கள் முதன் முதலில் ‘ஓசை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின் பந்தம்,பிள்ளை நிலா,விடுதலை,சங்கர் குரு,ராஜா சின்ன ரோஜா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.இப்படி நடிகை ஷாலினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தாலும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது தளபதி விஜய் அவர்களின் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் தான். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடிகை ஷாலினி அவர்கள் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்து அஜித் அவர்களின் 25 வது படமான “அமர்க்களம்” படத்தில் நடித்து உள்ளார். ஷாலினி, அஜித் குமார் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும், திருமணம் முடிந்து இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை ஷாலினி நேற்று (,நவம்பார் 20) தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஷாலினியின் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் அன்னதானம், நல திட்டம் என்று மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். மேலும், அவருக்கு ட்விட்டரில் #HBDShaliniAjith, #HappyBirthdaySHALINIAJITH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதன் மூலம் அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்ட செட் ஒன்றின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement