இவர் மீது தான் மிகப்பெரிய க்ரஷ். சிறு வயதிலேயே செய்த விஷயத்தை புகைப்படத்துடன் பகிர்ந்த வர்ஷா.

0
15152
varsha

கொரோனா வைரஸினால் உலகமே என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டு வருகிறது. இது விஷ்ணு பகவானின் கல்கி வ=அவதாரம் என்றும் கூறி வருகிறார்கள். போரை விட மோசமாக மக்களின் உயிரை பறித்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 377 பேர் கொரோனாவினால் அநியாயமாக இறந்து உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Varsha Bollamma

தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பல பேர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : கணவருக்கு கொரோனா அறிகுறி, பிறந்தநாளில் கணவரின் நிலை குறித்து கூறிய ஸ்ரேயா.

- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகம் படிப்பது, பெயிண்டிங், நடிகர், நடிகைகள் எல்லாம் ரசிகர்களுடன் சாட் செய்வது, உடற்பயிற்சி செய்து, சமையல் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருகின்றனர். இணைய தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர், நடிகைகள் எல்லாம் பொறுமையாக பதில் அளித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை வர்ஷா அவர்கள் இணையத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் பேசி வந்துள்ளார். அதில் ரசிகர்கள் உங்களுக்கு யார் மேல கிரஷ் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு வர்ஷா அவர்கள் கூறியிருப்பது, எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது தான் கிரஷ். ஐ லவ் யூ கோலி என்று பதிவிட்டு உள்ளார். மேலும், இவர் பள்ளியில் படிக்கும்போது வீராட் கோலியின் ஜெர்சி புகைப்படத்தை வரைந்துள்ளார்.

-விளம்பரம்-

அதை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் பிகில் படத்தில் கூட நடிகை வர்ஷா அணிந்து இருந்த நம்பர் 18 ஜெர்சிக்கான காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ககுறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான இளம் நடிகை திகழ்ந்து கொண்டு இருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த சதுரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : பட்டாபட்டி, மடித்த வேஷ்டி. மாஸ்டர் பாடலுக்கு மகனுடன் ஆட்டம். அசத்திய அரண்மனைகிளி சீரியல் நடிகை.

அதிலும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 96 படத்திலும் இவர் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்திலும் கால்பந்து விளையாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு இவர் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

Advertisement