பக்கத்து வீட்டு ஆன்டி ரோலுக்கு வேனா உன்ன கூப்புடுவாங்க – பிகில் பட நடிகையை கேலி செய்யும் ரசிகர்கள்.

0
1461
trisha
- Advertisement -

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடிக்க கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் ரிலீஸ் ஆன முதலில் பிளாப் படம் போல தோன்றினாலும் பின்னர் பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்பது போல காதலர்களின் படமானது அந்த படம். பொதுவான நிஜ வாழ்க்கையில் நடக்கும் காதலின் நிலை குறித்து அழகாக கூறி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்று கூட சமூக வலைதளத்தில் சில தகவல்கள் வேறானது. இந்த படத்தினை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார் என்று கூட கூறப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விண்னைத்தாண்டி வருவாயா 2 வந்தால் தன்னை கூப்பிட வேண்டும் என்று பிகில் பட நடிகை பதிவிட்டது, திரிஷாவின் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்திரஜா, இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்தனர்.

இதையும் பாருங்க : இவங்க ஆங்கரிங் வேண்டாம், மணிமேகலைய போடுங்க – விஜய் டிவிக்கு ரசிகர்கள் கோரிக்கை. (அப்படி யார மாத்த சொல்றாங்க பாருங்க)

- Advertisement -

மேலும், இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த பல்வேறு புது முக நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் இளம் நடிகையான ரேபா மோனிகா ஜானும் ஒருவர்.இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா.மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார்.

இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : விவாகரத்துக்கு பின் கெட்டுப்போன சினிமா வாழ்க்கை. உடல் எடை குறைத்து மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்.

-விளம்பரம்-

ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட இவர் குக்கு வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் சேர்ந்து ‘குட்டி பட்டாசு’ என்ற பாடலில் நடித்து இருந்தார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்ட ரேபா, விண்னைத்தாண்டி வருவாயா 2 வந்தால் யாரை கூப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று கமன்ட் செய்திருந்தார். இதை பார்த்த திரிஷாவின் ரசிகர்கள் பலர் திரிஷாவை தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement