சீனாவில் தொடங்கிய இந்த கொடூரமான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகிறது. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாஸ்க் அணிவது, சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்வது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்நிலையில் சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும் பைக் தீப்பிடித்து எறிந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திறந்த வெளிபகுதியில் கிருமிநாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம்.
அதற்காக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியாகி உள்ளது. சானிடைசரில் ஆல்கஹால் அளவு 60 சதவீதம் இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை படுத்தப்படுகிறது. அதோடு சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய உடன் சூடான பகுதிளில் பயன்படுத்தக்கூடாது. பெண்கள் கிச்சனில் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பைக் மீது சானிடைசர் தெளித்தனர்.
அப்போது சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளிக்கப்பட்டது. அப்போது பைக் தீப்பிடித்து எரிந்தது. வாகனத்தில் இருப்பவர் உடனடியாக இறங்கி தப்பினார். அருகில் இருந்த காவலாளிகள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சானிடைசர் தெளிக்கும்போது கவனம் தேவை என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.