கடந்த 2012 ஆம் ஆண்டு கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
என்ன தான் அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்திருந்தலும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தது என்னவோ ‘வருத்தப்படாதா வாலிபர் சங்கம்’ படத்தில் தான். அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்த இவர் 2016 இல் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விளாசமே இல்லாமல் போய்விட்டார்.
பின்னர் பல வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பிந்து மாதவி. தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, தனது சொந்த வாழ்விலும் சரி எப்போதும் சுட்டித்தனமான செய்லகளை செய்து வருவார்.
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிந்து மாதவி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது புகைப்படத்தை பார்த்து பலரும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல இருக்கீறீர்கள் என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.