இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, திரிஷா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ராம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருப்பார். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு(ராம்) தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். சமீபத்தில் கூட இவர் ட்விட்டரில் 96 படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறியது, 96 படத்தில் நான் ராம் அவர்களின் தங்கை கதை படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நான் நடித்த நிறைய காட்சிகளை எடுத்து விட்டார்கள். ஆனால், அந்தப் படம் எனக்கு ஒரு நல்ல அனுபவம். தற்போது அந்த காட்சிகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதையும் பாருங்க : ஒரு சீரியல் 90 எபிசோட் , இன்னோன்னு 100 எபிசோட் – அஸ்வின் நடித்த இரண்டு சீரியல் பற்றி தெரியமா ?
கருப்பாக இருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்ற பலரின் எண்ணங்களை தகிர்த்து தெரிந்தவர் சரண்யா ரவிச்சந்திரன். தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிப்புக்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர். நடிகை சரண்யா ரவிச்சந்திரன் அவர்கள் 90 குறும்படங்களில் நடித்துள்ளார்.
பின் இவர் காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி என பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி பாதியில் நின்ற வர்மா படத்தில் இவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பை பார்த்து பாலா அவர்கள் பாராட்டி இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார். வர்மா படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.