தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
அதே போல இந்த படம் 1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் வெளியாகி இருந்தது.
இந்தப் பாடலை அழகிய நாட்டுப்புறகுரலில் பாடிய மாரியம்மாள் யார் என்பது பலரும் அறிந்திராத விஷயம். இவர் ஆரம்பத்தில் ஊர் திருவிழாக்களில் பாட ஆரம்பித்த இவர் சாவு வீடுகளில் இவரது பாடல்களுக்கு ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார். இந்த பாடல் தற்போது வரை யூடுயூபில் 6 மில்லியனுக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் பிஜேபி ஆதரவாளரான கிஷோர் கே சாமி இந்த பாடலை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், கண்டா வரச் சொல்லுங்க என்று ஒரு மூன்றாம் தரப் பாட்டு , அதை ஒரு கிழவி பாடுது என்பதாலேயே பில்டப் . பத்தா குறைக்கு இந்த பறை எக்ஸ்டெரா புல்ஷிட் இருந்தால் சென்டிமென்டல் நான்சென்ஸ் என்று பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சாமியின் இந்த பதிவை பார்த்த பலர் கண்ட மேனிக்கு அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.