‘ஏண்டி நாங்க போன் பண்ணா மேனேஜர விட்டு தான் எடுப்பய’ – அஞ்சலி குறித்து பிளாக் பாண்டி. வைரலாகும் வீடியோ

0
902
blackpandi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் அஞ்சலி. இவர் ஆரம்பத்தில் மாடலிங், விளம்பர படங்களில் நடித்தார். பின் இவர் தனது படிப்பை முடித்தவுடன் குறும் படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 2007ஆம் ஆண்டில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்ததற்கு இவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது கிடைத்தது.

-விளம்பரம்-

அஞ்சலியுடனான நட்பு :

அதை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து அஞ்சலி பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிளாக் பாண்டி அவர்கள் அஞ்சலி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பே நல்ல நண்பர்கள்.

- Advertisement -

பிளாக் பாண்டியின் அப்செட் :

சமீபத்தில் ஒரு முறை மலேசியா போகும்போது அங்கு தான் அவளை பார்த்தேன். பின் பயங்கரமாக நான் திட்டினேன். ஏண்டி உனக்கு போன் பண்ணனும் என்றால் மேனேஜரை கூப்பிட்டு தான் எங்களிடமே பேச சொல்லுவியா? என்று கேட்டேன். உடனே அவள் தன்னுடைய போன் நம்பரை கொடுத்து கூப்பிடு என்று சொன்னார். நானும் போன் பண்ணினேன். தொடர்ந்து 4 முறை கூப்பிட்டேன். ஆனால், அவ எடுக்கவே இல்லை. மீண்டும் அவாய்ட் பண்ண ஆரம்பித்தது தெரிந்தது.

அந்த இடத்துக்கு போன அப்படியோ :

பொதுவாகவே அந்த இடத்திற்கு போனதுக்கப்புறம் அவர்களுக்குள் அந்த மாதிரி செய்ய தோணுதோ? என்று தெரியவில்லை என்று கூறினார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் பாண்டி. இவரை செல்லமாக பிளாக் பாண்டி என்று தான் கூப்பிடுவார்கள். சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

-விளம்பரம்-

பிளாக் பாண்டி கடந்து வந்த பாதை :

பின் தமிழில் 2000ல் வெளியான நாசர், விவேக், வடிவேலு போன்றவர்கள் நடித்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற காமெடி படத்தில் வடிவேலுவின் மகனாக நடித்து இருந்தார் பாண்டி. அதன் பிறகு இவர் கில்லி, ஆட்டோகிராப்,தீக்குச்சி,சாட்டை போன்ற பல படங்களில் இவரது காமெடிகள் மிகவும் ரசிக்கப்பட்டது. பிறகு இவர் விஜய் டீவி யில் ஒளிபரப்பான கனா காணும் டீவி என்ற தொடரில் நடித்தார்.

அதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதற்கு முன்னர் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது 2010 இல் வெளியான அங்காடி தெரு படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் வறுமையில் வாடும் பல கலைஞர்களுக்கு உதவியும் செய்து இருக்கிறார்.

Advertisement