அண்ணாத்த பட விமர்சனம், திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள் – ரஜினி மற்றும் அவரது ரசிகர்களை வச்சி செய்யும் ப்ளூ சட்டை மாறன்.

0
762
BlueSattaiMaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று வெளியான ‘அண்ணாத்த’ படத்தை விமர்சனம் செய்து இருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற இமான் இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார் இதுவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அனைத்து அஜித் படங்களுமே அன்பு, பாசம், நட்பு போன்றவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த படமும் சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தை போன்று ஒரு அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான்

ஆனால், இந்த படத்தில் தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அதே ஒன் லைன் ஸ்டோரி தான் எடுத்து இருக்கிறார்கள். இதுபோன்ற அண்ணன் தங்கை பாச கதைகள் தமிழ் சினிமாவில் 100 முறைக்கு மேல் வெளியாகி இருந்திருக்கும். அதேபோல தர்பார் படத்தின் பெரும் தோல்விக்கு பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கிறது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் இந்த படத்திற்கு தர்பார் படமே எவ்வளவோ தேவலாம் என்ற அளவிற்கு தான் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இதனால் இந்த படத்தை பல்வேறு விமர்சகர்களும் ரசிகர்களும் கழுவி ஊற்றினார்கள். இந்த படத்தை பார்த்து நொந்து போன பலரும் ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்காக காத்துகொண்டு இருந்த நிலையில் இந்த படத்தை கழுவி ஊற்றி இருந்தார் மாறன்.

இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை சமூக வலைதளத்தில் கேலி செய்து வந்தனர். மேலும், அவரை கலாய்த்து பல விதமான மீம்களை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் ரஜினியின் ரசிகர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பல விதமான மீம்களை போட்டு வருகிறார் மாறன்.

Advertisement