தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது.

இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

Advertisement

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகி இருந்தது. விஜய்யின் வருகையை அறிந்து கொண்ட ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இந்த நிலையில் சாலை ஒன்றின் சந்திப்பில் சிவப்பு நிற சிக்னல் போட்டு வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் அதனை மதிக்காத விஜயின் கார் அதனை வேகமாக கடந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக விஜய் வந்த அந்த காருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Advertisement

அதில் மாணவ செல்வங்களே.. சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள். வேலைக்கு செல்லும் இளையோர்களே வேகத்தை விட விவேகம் (படத்த சொல்லல) முக்கியம். ஏன்னா.. நமக்கு 500 ரூபா என்பது 10 கிலோ அரிசி வாங்கற பணம் ‘ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் கல்வி உதவி வழங்கும் விழாவில் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள், மாணவர்கள் நீங்கள் தான் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பல விஷயங்களை விஜய் கூறியிருந்தார்.

Advertisement

இதற்கு பலருமே பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பேசியதற்கு ப்ளூ சட்டை மாறன் ட்விட் ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க’… கமாண்டர் விஜய் மக்களுக்கு அறிவுரை. கட்அவுட், ஃபிளக்ஸ், பேனருக்கு நிறைய செலவு பண்ணாதீங்க. கவுண்டர் ரேட்ல மட்டும் டிக்கெட் வாங்குங்க. இதை எப்ப சொல்ல போறீங்க கமாண்டர் என்று விஜய்யை கலாய்த்தவாறு பதிவு போட்டிருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுதான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சிலர் ஆதரித்தம் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement