சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

Advertisement

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வீரம் படத்தின் இந்தி ரீ – மேக்கில் சல்மான் நடித்துள்ள படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கி இருக்கிறார்.

இவர் பிரபல இசையமைப்பாளரும் ஆவார். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் சல்மான் கான் அஜித்தாகவும், பூஜா ஹெக்டே தமன்னா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போதே இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றினார். அஜித் நடித்து தமிழில் வெளியான “வீரம்” படத்தில் அஜித் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரமாக இருப்பார்.

Advertisement

ஆனால் இங்கே சல்மான் கான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியிருக்கும் “கைதி” ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஆதரப்தியை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் நடித்து வரும் வீரம் ரீமேக் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சங்களை பெற்று வருகிறது.

Advertisement

இந்த திரைப்படம் பாலிவுட்டிலேயே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘உயிரை கையில பிடிச்சிட்டு பார்த்துட்டு இருந்தோம்,படம் முழுக்க செண்டிமெண்ட் போட்டு சாவடிச்சிட்டானுக.எல்லாம் செயற்கையா இருக்கு,மெட்ரோ ட்ரெயின் ல வர சண்டை காட்சியில் டெல்லி மெட்ரோவே ஸ்தம்பிச்சிட்டு அந்தளவுக்கு எடுத்து வச்சிருக்காங்க,படத்துல ஒண்ணுமே நல்லா இல்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement