அடுத்தவங்கள நக்கல் அடிக்கும்போது தெரில இப்போ தெரியுதா – கேலி செய்த விஜய் ரசிகர்களுக்கு தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை

0
2449
maaran
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

அணைத்து படங்களையும் விமர்சிக்கும் மாறன் ஒரு படத்தை எடுத்துக்காட்டட்டும் என்று பலரும் மாறனை விமர்சித்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவித்து கடந்த 2019 ஆம் படத்தின் அறிவிப்பையும் அறிவித்தார்.இப்படி ஒரு நிலையில் தனது படத்திற்கு ‘ஆன்டி இந்தியன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும், படத்தின் பணிகள் நிறைவடைந்த படத்தை சென்சார் சான்றிதழுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பினார் மாறன். ஆனால், படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்தது. இந்த படத்தில் கபாலி மற்றும் ராஜா என்ற கதாபாத்திரம் யாரையோ குறிப்பிடுவது போல இருக்கிறது. அதனால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று சொன்னதாக கூறினார் மாறன்.

இருப்பினும் தன் படம் தடை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது தயாரிப்பாளர்கள் சிலர் மகிழ்ச்சி ஆடைந்தனர். அவர்களை போலவே இதுவும் ஒரு தயாரிப்பாளரின் படம் தான் என்ற அறிவு கூடவா கிடையாது என்று கூறி இருந்தார் மாறன். மாறன் படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் பல நடிகர்களின் ரசிகர்கள் இவரது படம் வெளிவர கூடாது என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் ட்விட்டரில், விமர்சனம் பண்ணி நிறைய பேருக்கு நஷ்டம் உருவாக்கி கொடுத்த உனக்கு நீ என்ன கஷ்டப்பட்டாலும் ஒரு சினிமா ரசிகனாக சப்போர்ட் இல்லை. நீ எடுத்து வைத்திருக்க காவியத்தை ஆயிரம் பேர் குறை சொல்ல காத்திருக்கும் என்பதை மறந்துடாத. படம் ஓடணும்னு சர்ச்சைக்குரிய கதை எடுத்ததும் யாம் அறிவோன் என்று விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் போட அதற்கு இன்னொரு விஜய் ரசிகர் அடுத்தவங்கள நக்கல் அடிக்கும் போது தெரியல இப்போ தெரியுது போல என்று கமென்ட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த மாறன் ஊக்கத்திற்கு நன்றி பீஸ்ட் புகழ் மற்றும் டீஸ்ட் பாலாஜி, இன்னும் என்னை நிறைய ஊக்குவியுங்கள் என்று தன்னுடைய நக்கல் பாணியில் பதில் அளித்திருக்கிறார்.

Advertisement