ப்ளூ சட்டை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்ணுறேன் பாரு என்று ப்ளூ சட்டை மாறனை கிண்டல் செய்து உள்ள பிரபல இயக்குனர் கொடுத்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவின் வெளியாகியுள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ள படம் ஆன்ட்டி இந்தியன். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடந்து உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர், படக்குழுவினர் என அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வில் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பேசியது, இந்த கதையை உருவாக்கும் போது நான் பதிவெல்லாம் செய்யவில்லை. அந்த நம்பிக்கையும் கிடையாது. நான் படம் பண்ணப் போகிறேன் என்று என் நண்பர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று கிண்டல் செய்தார்கள்.
இதையும் பாருங்க : தன்னை போன்ற வாய்பேச முடியாத பல ஆயிர குழந்தைகளுக்கு நாடோடிகள் அபினயா செய்து வரும் சேவை.
பின் நான் படத்தை எடுப்பதை தள்ளிவைத்துவிட்டு படம் பற்றி பலரிடம் ஆலோசனை கேட்டேன். இது குறித்து கேலி செய்தார்கள். கடைசியாக படத்தை எடுக்க முடிவு செய்தேன். படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்திருக்கிறது. மேலும், படம் முடிந்தவுடன் நான் இயக்குனர் பாரதிராஜாவை சென்று சந்தித்தேன். அப்போது அவர் உன் படம் முடிந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். உன் படத்தை போடு நான் ப்ளூ சட்டையை போட்டு வந்து உன்னை என்ன பண்றேன் பாரு என்று கூறினார்.
ஒரு வருடத்திற்கு திரையுலகில் 100 படங்கள் வெளியானாலும் அதில் 10 படங்கள் தான் நன்றாக இருக்கும். அதுவும் இந்த கொரோனா காலத்தில் பல படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடைக்கின்றன. ஆனால், நிச்சயம் ஆன்ட்டி இந்தியன் படம் உங்கள் அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.