தற்போது சினிமா ரசிகர்கள் அனைவரும் புதிய படத்தை பார்ப்பதற்கு முன்பாக இணையத்தில் விமர்சனங்களை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் டால்கிஸ் யூடுயூப் ஊடகம் ஒன்றில், எப்போதும் நீல நிற உடை அணிந்து, எதார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் கூறுபவர் ‘ப்ளூ சட்டை மாறன்’.நல்ல படங்கள் பற்றி கூட இவர் தவறாக விமர்சித்துள்ளார். என ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்ல வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் மிரட்டியதாக கூட ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டை முழுவதும் மறுத்தார் மாறன். இருப்பினும் அதன் பின்னர் கூட தமிழில் வெளியான அணைத்து படங்களையும் வச்சு செய்து வந்தார் மாறன்.
இவரது ஒருமை பாங்கான பேச்சுக்களாலும், நடிகர் நடிகைகளை கொஞ்சம் தரம் தாழ்ந்து பேசுவதாலும் சில பிரபலங்கள் கூட இவருக்கு கண்டனத்தை கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நாளை (செப்டம்பர் 3) வெளியாக இருக்கும் ஒரு படத்தை திருட்டுத்தனமாக பார்த்து விட்டு அதனை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ள மாறனுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.
ஹாலிவுட்டில் உருவாகியுள்ள ‘Tenet’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. அந்த படத்தை தான் மாறன் திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார். இதனால் கடுப்பான சினிமா ரசிகர்கள் பலரும் மாறன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்து வருகின்றனர். மேலும், மாறன் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.