பிணைய கைதியே நாம தான், விஜய்க்கே இந்த கதின்னா, அடுத்த பட காம்பினேஷன யோசிச்சி பாரு – ப்ளூ சட்டையின் பீஸ்ட் விமர்சனம்.

0
679
Beast
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-5.png

அதிலும் இவர் வலிமை படத்தை குறித்து விமர்சனம் செய்தது பயங்கர சர்ச்சையானது. அதில் அவர், படத்தை கழுவி ஊற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல் அஜித்தை தொடர்ந்து உருவக் கேலி செய்து வந்தார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து அஜித் மற்றும் வலிமை படத்தை கேலி செய்தே வந்தார். இவரின் இந்த கேலிக்கு ஒரு சில விஜய் ரசிகர்கள் கூட ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : குடிக்ச்சிட்டு நான் அப்படி பண்ணிட்டேன், அதான் சசி அண்ண என்கிட்ட பேசுறது இல்ல – சுப்ரமணியபுரம் டும்கான் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ?

- Advertisement -

மாறனின் பீஸ்ட் விமர்சனம் :

இப்படி ஒரு நிலையில் நிலையில் தற்போது பீஸ்ட் படத்தையும் வச்சி செய்து இருக்கிறார் மாறன். அதில் இந்த படத்தில் கதை என்பதே ஒன்றும் இல்லை, இந்த படம் பார்த்து முடித்துவிட்டு தீவிரவாதிகள் மீது இருந்த பயமே போயிடுச்சி, நாமளே பாகிஸ்தான் போய் தீவிரவாதிகளை அடிக்கணும்னு கைலா ஊருது. இந்த படமே இப்படினா அடுத்து இவர் இயக்கும் ஹீரோவை நினைத்து பாருங்க என்று ரஜினியையும் கலாய்த்து உள்ளார்.

ட்ரைலர் வெளியான போதே கலாய்த்த மாறன் :

பீஸ்ட்த்தின் ட்ரைலர் வெளியான போதே மாறன், அந்த படத்தை கேலி செய்ய துவங்கிவிட்டார். பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் விஜய் அறிமுகமாகும் காட்சியில் ஒரு துணியை கத்தியால் கிழித்துவிட்டு என்ட்ரி கொடுப்பார். அதனை குறிப்பிட்டு இருந்த மாறன் ‘காவியை கிழிக்கும் விஜய். தில்லான அரசியல் குறியீடு என ரசிகர்கள் கொண்டாட்டம்.’ என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-4.png

ஹாலிவுட் பட போஸ்டரை பதிவிட்டு மாறன் :

மேலும், பீஸ்ட் ட்ரைலர் வெளியான அதே நாளில் ஹாலிவுட்டில் வெளியான paul Blart Mali Cop என்ற படத்தின் காப்பி என்பது போல சூசகமாக பதிவு ஒன்றை போட்டு இருந்தார் மாறன். மேலும், புதுவையில் உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக போர்டுகள் தயாரித்து இருந்தார்கள். அதே போல பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்து இருப்பதாகவும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is image-42.png

மாறன் கேள்வி :

இப்படி ஒரு நிலையில் இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாறன் ‘சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்குத்தானா? – சினிமா ரசிகர்கள் கேள்வி.’ என்று பதிவிட்டுள்ளார். அதே போல தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? – தமிழக மக்கள் கேள்வி என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement