குடிச்சிட்டு நான் அப்படி பண்ணிட்டேன், அதான் சசி அண்ண என்கிட்ட பேசுறது இல்ல – சுப்ரமணியபுரம் டும்கான் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ?

0
490
Dumkaan
- Advertisement -

தமிழ் சினிமாவின் அற்புத படைப்புகளில் ஒன்று எனக் கூற சுப்ரமணியபுரம் படத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அந்த படம் வெளிவந்து சமீபத்தில் 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ட்விட்டரில் #13YearsOfSubramaniyapuram என்ற ஹேஷ் டேக்கை கூட ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த்தனர். இந்த நிலையில் இப்படத்தில் டும்கான் என்ற கதாபத்திரத்தில் நடித்த நடிகரின் ஒரு ஸ்வாரஸ்ய தகவலை தற்போது பார்க்கலாம். சுப்ரமணியபுரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் கதையின் போக்கை கூறுபவராக நடித்தவர் தான் மாறி.

-விளம்பரம்-
dumka

இந்த படத்தில் இவருடைய கதைப் பெயர் ‘டும்கான்’. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, வழக்கம் போல டீ கடைக்கு நாளு பேர் வந்தாங்க, வந்து என்ன தம்பி பன்றனு கேட்டங்க, அதுக்கு நான் செல்லூர்ல இருக்க மைக் செட்டு கடைல வேல பாக்றேன்னு கொஞ்சொம் எகத்தாலமா சொன்னென்’ அதுக்கு அவங்க, இல்லப்பா ஒரு படத்துல நடிக்க ஆள் தேடிகிட்டு இருக்கோம் நீ நடிக்க வரயா? அப்டின்ன்னு கேட்டாங்க.

- Advertisement -

நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி :

பின்னர் அப்படியே பேசிய அவர்நாம் படத்தைப் பார்த்து கை தான் தட்டிக் கொண்டிருதோம், ஆனால் தற்போது நம்மை படத்தில் நடிக்க அழைக்கிறார்கள் என வியந்து போய் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த படம் தான் சுப்ரமணியபுரம்.பின்னர் அவரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சென்ற படக்குழுவினர், சில நாட்கள் கழித்து தொலைபேசியில் அழைத்து மாறியை நடிக்க அழைத்துள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is 4-41.jpg

சமீபத்தில் அளித்த பேட்டி :

‘சுப்ரமணியபுரம் படம் வெளிவந்த பின் படத்தில் சில காட்சிகளில் தான் வருவேன் என, நினைத்தேன் ஆனால், படத்தின் க்ளைமேக்ஸ் சீனில் என்னைத்தான் ஹூரோ போல் காடியிருப்பார் அண்ணன் சமுத்திரகனி.என்று கூறுகிறார் மாறி.படத்தில் வரும் காட்சிகளில் இதை மட்டும் செய் மாறி நீ எனக் கூறி என்னை நடிக்க வைத்தனர். ஆனால், படத்தில் பார்க்கும் போது காட்சிகள் அற்புதமாக வந்திருந்தது. அதனைக் கண்டு நான் மிரண்டு போனேன்.

-விளம்பரம்-

கோபத்தில் இருக்கும் சசி :

அதற்க்கு சசிகுமார் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் பெயரைத்தான் பச்சையாக குத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார். அதே போல சசி குமார் தன் மீது கோபமாக இருப்பதாக கூறிய மாரி, நான் குடித்துவிட்டு பாக்கறவங்ககிட்ட எல்லாம் அண்ணனோட நம்பரை கொடுத்துட்டேன். அதான் என் மீது அவர் கோவமாக இருக்கிறார். இப்போ நான் நல்லா தான் இருக்கேன். ஆனா, படத்துக்கு யாரும் கூப்பிடல.

தற்போது செய்து வரும் வேலை :

தற்போது ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வரும் அவர், தற்போது இருக்கும் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும்ல், உழைத்து சாப்பிட்டிட்டு தான் வருகிறேன் என்றும் ஆனால், சினிமாவில் நடிக்க தான் எனக்கு ஆசை, பாக்கறவங்க எல்லாம் ஏன் இன்னும் வேறு படத்தில் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள், சசி அண்ண என்ன கூப்பிடுவார்னு நம்புறேன் என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார் மாரி.

Advertisement