-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

படத்தை போய் பார்க்கறதா இருந்தா நீங்கதான் ஆடு, அதாவது கோட் – ‘கோட்’ படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

0
458

பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ‘கோட்’ திரைப்படத்தை விமர்சித்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘கோட்’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ‘கோட்’ படத்தை விமர்சித்து, தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோட் படம்:

அதில் அவர், இந்த படமே ஒரு பழைய கதை. கதையே பழைய கதை என்றால், அதோட மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கோங்க. நீங்கள் யூகித்ததை விட படத்தை மிகவும் மோசமாக எடுத்து வைத்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் முதலில் கென்யாவில் ஒரு ஃபைட் சீக்வென்ஸ் நடக்கும். அதை பார்க்கும் போதே நமக்கு இன்னும் எப்படி மூன்று மணி நேரம் உட்கார போறோம் என்கிற பீதி கிளம்பி விடும். படத்தில் ஹீரோ கென்யாவில் இருந்து ஒன்றை எடுத்து வருகிறார்கள். பிறகு பாங்காக் சென்று ஏதோ செய்யும்போது, குழந்தையை தொலைத்து விடுகிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன்:

-விளம்பரம்-

அடிப்படையான போலீஸ் அதிகாரி சிந்திக்கிற அளவிற்கு கூட, ஹீரோ இன்டலிஜன்ஸ் அதிகாரி சிந்திக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் படத்தில் இரண்டு விஜய் இருக்கிறார்கள். ஒரு விஜய் இன்னொரு விஜயை அடிக்கும் போது, விஜய் அடிக்கிறார் என்று சந்தோஷப்படுவதா, இல்லைவிஜய் அடி வாங்குகிறார் என்ன வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. முதலில் இந்த படத்திற்கு எதற்கு டபுள் ஆக்சன். அதனால் ஒரு சுவாரசியமும் இல்லை.

-விளம்பரம்-

டி- ஏஜிங் குறித்து:

மேலும், இயக்குனர் இந்த படத்தில் டி- ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கிறாரே தவிர, அதனால் படத்திற்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. வெங்கட் பிரபு ஸ்கிரிப்ட் தரமாக செய்யாமல், டெக்னாலஜியை நம்பி படத்தை ஒப்பேற்றியுள்ளார். பின் படத்தின் உண்மையான வில்லன் யார் என்றால், அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். பாடல்களும் சரி இல்லை, பின்னணி செய்யும் சரியில்லை. கிளைமாக்ஸில் சிறப்பாக பின்னணி இசை அமைக்காமல், கிரிக்கெட் கமெண்ட்ரியை ஓடவிட்டுள்ளார்கள். அதுவும் முழுக்க முழுக்க தோனி புராணமாக இருக்கிறது.

நீங்கதான் ஆடு:

படத்தின் கதை மிகவும் பழைய கதை. திரைக்கதை அதைவிட மோசம். இதை மூன்று மணி நேரம் எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தின் நேரத்தை கம்மி செய்து இருந்தால், ஓரளவிற்கு பார்க்கிற மாதிரி இருந்திருக்கும். எங்களால் படம் பார்க்கவே முடியவில்லை. இதையும் மீறி நீங்கள் படம் பார்க்க போனால், ‘நீங்கதான் ஆடு… அதாவது கோட்’ எனக் கூறியுள்ளார். தற்போது இவரின் விமர்சனம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news