இந்த தமிழ் நடிகை ஓகே சொன்னால் ப்ளூ சட்டை மாறன் படம் வெளியாக வாய்ப்பு. யார் தெரியுமா ?

0
740
blue

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

இதற்காக அவர்கள் இவர் ஒரு படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்றும் கூறினர். ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கு வந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இந்த விமர்சனம் மூலமாக அதிக அளவு பிரபலமாகி தன்னுடைய கனவு நினைவாகி விட்டது என்று நினைத்துக் கொண்டு உள்ளார்.அதே போல இவரது விமர்சனங்களில் படத்தின் விமர்சனத்தை விட தனி நபர் விமர்சனம் தான் பெரும்பாலும் இருக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் வருகிறது.

- Advertisement -

அதே போல அணைத்து படங்களையும் விமர்சிக்கும் மாறன் ஒரு படத்தை எடுத்துக்காட்டட்டும் என்று பலரும் மாறனை விமர்சித்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவித்து கடந்த 2019 ஆம் படத்தின் அறிவிப்பையும் அறிவித்தார்.இப்படி ஒரு நிலையில் தனது படத்திற்கு ‘ஆன்டி இந்தியன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும், படத்தின் பணிகள் நிறைவடைந்த படத்தை சென்சார் சான்றிதழுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி தணிக்கை குழு இந்த படத்திற்கு தடை விதித்து .

ஏற்கனவே படம் தடை பெற்றது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த மாறன் ‘கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம் தணிக்கை குழுவிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு அவர்கள் படத்தை நிராகரித்துவிட்டார்கள். இதனால் நான் இதனால் இந்த படத்தை திருத்த குழுவிற்கு (Revising Committee) அனுப்பி மறுபருசிலனை செய்ய திட்டமிட்டுள்ளோம். உரித்த நேரத்தில் படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி இருக்கு, நடிகை கௌதமியும் ஓகே சொன்னால் தான் இந்த படத்தின் தடைக்கு தீர்வு காணப்படும். அதற்கு காரணம் நடிகை கௌதமி தான் ரிவைசிங் கமிட்டியின் Chairman என்பது தான். கௌதமியிடம் தான் மாறன் இந்த ‘ஆன்டி இந்தியன்’ படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் அவருடன் சேர்ந்து மற்ற கமிட்டி மெம்பர்கள் ஓகே சொன்னால் தான் இந்த படத்தின் தடைக்கு தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement